Showing posts with label விளையாட்டு. Show all posts


 அட்டாளைச்சேனை கடற்கரை விளையாட்டு மைதானம் புனரமைப்பு!"

அட்டாளைச்சேனை கடற்கரையில் அமைந்துள்ள Marksman விளையாட்டுக் கழக வீரர்களின் கோரிக்கைக்கு அமைய, இன்று (11) அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ASM. உவைஸ் அவர்களின் தலைமையில், சபையின் இயந்திர வளங்களைப் பயன்படுத்தி கடற்கரை விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டது.

கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (CCD) அனுமதி மற்றும் மேற்பார்வையின் கீழ் இப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ மு.பிரதி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான பாறுக் நஜித், கௌரவ உறுப்பினர் அஸ்வர் சாலி, CCD உத்தியோகத்தர் IP. கியாத் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றி, விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் ஆதரவளிப்பது எமது சமூகப் பொறுப்பாகும்.


 

A9 வீதி புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் பிஞ்சுக் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன 

விபத்தில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில்/சிகிச்சை பலனின்றி குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.  

படுகாயமடைந்த தாய் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, வவுனியா பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நடவடிக்கை - விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

ஹெல்மெட் & பாதுகாப்பு - இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் (Helmet) அணிவது கட்டாயம். அதுவும் குழந்தைகளுடன் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை!

 இரவு/மழைக்காலப் பயணம் - வீதி மூடுபனி அல்லது மழையினால் வழவழப்பாக இருக்கும் போது மேலதிக அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துங்கள்.

  




பவர் ஸ்டார் விளையாட்டு கழகம் தின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது  

இந்த நிகழ்வு ஒலுவில் அமைந்துள்ள OSAKA LANKA GUEST HOUSE மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹபீப் முஹம்மட் பவுண்டேஷன் நிர்வாகிகளான H.M. மக்கீன் நீதிமன்ற உத்தியோகத்தர் y.றிதாஸ் தபால் அலுவலக உத்தியோகத்தர் மற்றும்  கழகத்தின் தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள், வீரர்கள் மற்றும் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

‎எமது கழகத்தின் புதிய சீருடைக்கான முழுமையான அனுசரணையை வழங்கிய HM FOUNDATION நிறுவனத்தின் நிர்வாகிFAYAS MOWLAFI அவர்களுக்கு POWER STAR SPORTS CLUB சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

‎அதேபோல், இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த கழகத்தின் உயர்பீட உறுப்பினர்கள், நிர்வாகத்தினர் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.பவர் ஸ்டார் விளையாட்டு கழகம் நிர்வாகம்.

‎


 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியமையினால் ஆபத்து ஏற்பட்டது.

எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL606 விமானம், வெள்ளிக்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் கொழும்பு திரும்பியது.

மின்னல் தாக்கம்

மின்னல் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானம் திரும்பியுள்ளது

விமானப் பயணத்தின் போது பலத்த சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து விமானத்தின் எஞ்சின்களில் ஒன்றிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறியதைக் காண முடிந்துள்ளது.

எனினும், சிறிது நேரத்திலேயே நிலைமை வழமைக்குத் திரும்பியதோடு, விமானம் மின்னல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று சிறியளவில் சேதமடைந்துள்ளதாக விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிட்னி நோக்கிய பயணத்தைத் தொடர முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானப் பணியாளர்களுக்குப் பாராட்டு

இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் மீண்டும் கொழும்புக்குத் திரும்பி, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாகத் தரையிறங்கியது.


 ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 15ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதின.

 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

 

அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணிக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும் 18 ஆவது ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்கயை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது


எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கவுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான பிரமோத் மதுஷான் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றத்திற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) தொழில்நுட்பக் குழுவின் அனுமதியும் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளமையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


இந்த நியமனமானது, 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணியைத் தயார்படுத்தும் முகமாக டிசம்பர் 15 முதல் ஜனவரி 25 வரையான குறுகிய கால அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நிலவும் சீரற்ற  வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சையை (GIT) ஜனவரி 11, 2026 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வர முடியாவிட்டால், அவர்கள் தங்கள் பாடசாலையின் அதிபருக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும்


அதேபோல், சம்பந்தப்பட்ட அதிபர்கள் தங்கள் பாடசாலையில் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் குறித்து அறிவிக்கவேண்டும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது





பதுளை - மஹியங்கணை இடையேயான மின் இணைப்பு கோபுரங்களின் உடைவு சீர் செய்யப்படும் வரை களுவாஞ்சிகுடி பிரதேத்தில் லக்ஷபாண மின்சாரம் சுழற்சி முறையிலே வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது 

அம்பாறை மாவட்டத்திலும் சுழற்சி முறையிலே மின்சாரம் வழங்கப்படுகிறதுc


 2026 பிஃபா உலகக்கிண்ண போட்டிக்கு ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

 





TRIPLE N SC TOURNAMENT - 2025 சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது

அல்-நஜா விளையாட்டு கழகம்.

நற்பிட்டிமுனைTRIPLE N விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு 08 பேர் 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட  கிரிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் (2025.10.30) வீரமுனை விஷ்ணு விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடி சம்பியன்மகுடத்தை சூடிக்கொண்டது  அல்-நஜா விளையாட்டு கழகம்.

இறுதிப்போட்டியில் எமது கழகத்தின் சகலதுறையாட்டக்காரர் அஸ்லம் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதுடன் வெற்றி பெற்ற எமது அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 35 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.இச்சுற்றுப்போட்டியில் கழக வீரர்களின் கூட்டு முயற்சியினை பாராட்டுவதோடு அணியை சிறப்பாக வழி நடாத்தி பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் மிகவும் சிறப்பாக செயற்பட்ட கழகத்தின் தலைவர் Fahath Gm Fahath மற்றும் அஸ்லம்,றிகாஸ் எல்லோரையும் கழகம் வாழ்த்துவதோடு எமக்கு ஆதரவு வழங்கிய கழக வீரர்கள் மற்றும் நற்பிட்டி மண்ணின் நல்லுள்ளங்களுக்கும் இப்போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்த TRIPLE N விளையாட்டு கழகத்தினருக்கும் எமது அல்-நஜா விளையாட்டு கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

✔️Man Of the Match - Aslam - Al Naja

✔️Man Of the Series - Aslam- Al Naja

🏆Champion - Al Naja sc

🥇Runner Up - vishnu SC

Thank You

-ANSC MEDIA UNIT-

 



 




YOUNG WISHERS MEGA NIGHT TOURNAMENT - 2025 சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டதுஅல்-நஜா விளையாட்டு கழகம்..

இறக்காமம் YOUNG WISHERS விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு 08 பேர் 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மின்னொளியிலான கிரிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி (2025.08.23) இறக்காமம் விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடி சம்பியன்மகுடத்தை சூடிக்கொண்டது எமது அல்-நஜா விளையாட்டு கழகம்.


இறுதிப்போட்டியில் எமது கழகத்தின் சகலதுறையாட்டக்காரர் அஸ்லம் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டாரௌ வெற்றி பெற்ற எமது அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 50ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.இச்சுற்றுப்போட்டியில் கழக வீரர்களின் கூட்டு முயற்சியானை பாராட்டு தோடு அணியை சிறப்பாக வழி நடாத்தி பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் மிகவும் சிறப்பாக செயற்பட்ட கழகத்தின் தலைவர் Fahath Gm Fahath மற்றும் அஸ்லம்,றிகாஸ் எல்லோரையும் கழகம் வாழ்த்துவதோடு எமக்கு ஆதரவு வழங்கிய கழக வீரர்கள் மற்றும் இறக்காம மண்ணின் நல்லுள்ளங்களுக்கும் இப்போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்த YOUNG WISHERS விளையாட்டு கழகத்தினருக்கும் எமது அல்-நஜா விளையாட்டு கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.


 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 - தற்போதைய நிலவரம்!

ஆஸ்திரேலியா 100% வெற்றிப் பட்டத்தைப் பிடித்து புள்ளிப்பட்டியலில் தலைசிறந்த இடத்தை பிடித்துள்ளது!

🇱🇰 இலங்கை 2வது இடத்தில் திகழ்ந்து பலத்தை நிரூபிக்க தொடங்கியுள்ளது.

🇮🇳 இந்தியா மற்றும் 🏴 இங்கிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது!

🇧🇩 பங்களாதேஷ் ஒரு வெற்றி பெற்றாலும் இன்னும் பல முன்னேற்றங்கள் தேவை.

🌴 வெஸ்ட் இண்டீஸ், 🇳🇿 நியூசிலாந்து, 🇵🇰 பாகிஸ்தான், 🇿🇦 தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இன்னும் தங்கள் பயணத்தை தொடக்கவில்லை.

📊 Top 2 அணிகள் 2027 இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்!

🕒 DED – மெதுவான ஓவர் வீச்சுக்கான புள்ளி குறைப்பு

உங்கள் பிடித்த அணிக்கு ஆதரவளியுங்கள்! ❤👇





 தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார்.

மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார்.

கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முல்டர் ஆட்டமிழக்காது 367 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார்.

இந்தப் போட்டியில் முல்டர் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரயன் லாரா ஓர் ஜாம்பவான் எனவும் அவரது சாதனையை தாம் முறியடிப்பது பொருத்தமற்றது எனவும் லாராவின் சாதனை அப்படியே நீடிக்க வேண்டும் அதுவே முறை எனவும் முல்டர் தெரிவித்துள்ளார்.

அணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தாம் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் இந்தப் போட்டியில் முல்டர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் சார்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை முல்டர் பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது நாட்டு வீரர் அல்லாத ஓர் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்கக் கூடாது அவரது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென முல்டர் சாதனை முயற்சியை கைவிட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது



 இலங்கை அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸ் அணி, இலங்கை அணியை 16 ஓட்டங்களால் தோற்கடித்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று(05) இடம்பெற்ற இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி, 45.5 ஓவர்களில் 248 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

மூன்றாவது போட்டி

இதன் மூலம் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற சம வெற்றியை பெற்றுள்ளன.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இறுதிப்போட்டி, ஜூலை 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. 



அல்ஹம்துலில்லாஹ்......


2025ம் ஆண்டுக்கான இரண்டாவது வெற்றி மகுடம்.....


நிந்தவூர் அட்வென்சர் சம்பியன் ட்ரோபி-2025 சம்பியனாது அட்டாளைச்சேனை அல் நஜா அணி!


நிந்தவூர் அட்வென்சர் சம்பியன் ட்ரோபி-2025 இச்சுற்றுத்தொடரில் 32 பலம் பொருந்திய கழகங்கள் பங்குபற்றிய  மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தையும் 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிசீலினையும் தட்டிச்சென்றது சென்றது  எமது  அட்டாளைச்சேனை அல் நாஜா அணி.


இச்சுற்றுப்போட்டியினை சிறப்பாக நடாத்தி முடித்த நிந்தவூர் அட்வென்சர் விளையாட்டு கழகத்திற்கும் இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக மகுடம் சூட பல வழிகளில் ஒத்தாசைகள் வழங்கிய எமது கழக நிருவாகிகள் ஆதரவாளர்கள் அனைபேருக்கும் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.....


-ANSC MEDIA-


 தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

 


தென்னாபிரிக்கா மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (28) தொடங்கியது.

 


இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் விளையாடிய தென்னாபிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 418 ஓட்டங்களை  எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, ஸிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

 


ஸிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 200 ஓட்டங்களைக் கடந்து விளையாடி வரும் நிலையில், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், அந்த அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.

 


தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். ஸிம்பாப்வே அணித் தலைவர் கிரைக் எர்வின், கேசவ் மகாராஜின் 200-வது டெஸ்ட் விக்கெட்டாக மாறினார்.

 


இதுவரை தென்னாபிரிக்க அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேசவ் மகாராஜ், 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 11 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஒரு பத்து விக்கெட்டுகள் அடங்கும்.


 இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 19 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவை அறிவித்துள்ளது.

 

அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டிநாளை மறுதினம் (25) கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

முதல் டெஸ்டின் போது பந்து வீசும்போது இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டதால், மிலன் ரத்நாயக்க இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Powered by Blogger.