Showing posts with label கட்டுரை. Show all posts




ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சஹ்ரான் என்ற பயங்கரவாதியை நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதுமில்லை” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை சில ஊடகங்கள் வேறு விதமாக செய்தியாக்கியுள்ளதாக றிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். தம்மை ஏழு மாதங்கள் விசாரணை செய்த பின்னர் நிரபராதி என விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்களமே பரிந்துரை செய்திருந்த நிலையில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் “further report” ஒன்றில் பதிவாகியிருந்ததாகவும், அந்தத் தகவல் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டதை சில ஊடகங்கள் தமக்குச் சாதகமான வகையில் வேறு திசையில் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் போது மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் மேலும் தெரிவித்ததாவது:

“ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகமோ, முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை.”

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு சட்டநடவடிக்கை!”

தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் ரிஷாட் பதியுதீன் கடுமையாக நிராகரித்தார்.

அதேபோன்று, வர்த்தகர் அலாவுதீனுடன் தமக்கிருந்த தொடர்பை அடிப்படையாகக் கொண்டு சஹ்ரானுடன் தொடர்பு ஏற்பட்டதாக Additional Solicitor General நீதிமன்றத்தில் தெரிவித்ததாக வெளியாகிய செய்தியையும் அவர் மறுத்தார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீண்டகால விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தம்மை மீண்டும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்த முயற்சிப்பது சதியாக இருக்கலாம் எனத் தாம் கருதுவதாக றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எனினும், தாம் எந்தவித அச்சத்துக்கும் உள்ளாகவில்லை என்றும், ஈஸ்டர் தாக்குதலுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தமக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்த என்னை, சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர்” என ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு, பாராளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், தற்போது விசேட விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கைகளின் ஊடாக உண்மையான நிலை வெளிவரும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்தார். 

இதேவேளை, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் பேசுவதற்கு தாம் முயற்சித்ததாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“இந்த விடயம் தொடர்பாக uiவெளிவிவகார அமைச்சருடன் பேசுவதற்கு நான் தொடர்புகொண்டேன். ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.



க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:

புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்

2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.


இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள்

புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும்.

✅ கட்டாய Subjects – 5:

இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்:

1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3)

2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3)

3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3)

4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3)

5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2)

🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14

✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2:

மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2.

Second National Language

Information and Communication Technology

History

Civic Education

Health and Physical Education

Technology :

Tourism and Hospitality Management Technology

Design and Engineering Technology

Livestock Product Technology

Artistic Product Technology

Entrepreneurship and E-commerce Technology

Geography

Aesthetics Education:

Oriental Music

Western Music

Canatic Music

Oriental Dance

Bharatha Dance

Western Dance

Drama and Theatre

Art

Entrepreneurship and Financial Literacy

➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும்.

🔹 GPA (Grade Point Average) முறைமை:

பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை.

இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும்.

✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள்  உதாரணமாக):

% Marks Range Grade Point

90% - 100% 4.0

80% - 89% 3.7

70% - 79% 3.3

60% - 69% 3.0

50% - 59% 2.7

40% - 49% 2.0 (Pass)

Below 40% 0.0 (Fail)

👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே.

✅ GPA கணக்கீட்டு முறை:

மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு:

Mathematics: 3.7

English: 3.3

Mother Tongue: 4.0

Religion: 3.7

Science: 3.0

Optional Subject 1: 3.5

Optional Subject 2: 3.2

📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4

📌 Final GPA = 24.4 / 7 = 3.48

இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும்.

🔹 GPA முறைமையின் நன்மைகள்:

✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது

✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம்

✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது

✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும்

✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம்

🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்:

📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும்

📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும்

📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்

இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது.

📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை.

copy


 ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஈரான் எடுத்துள்ள திடீர் தீர்மானத்தால் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் பிரதான விநியோக பதையான ஹார்முஸ் நதியின் ஊடான கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் பாராளுமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக பல நாடுகளில் கப்பல்கள் அந்தப் பாதையின் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் ஏற்பட்டுள்ளது

எரிபொருள் தட்டுப்பாடு

இதனால் இலங்கை உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கும் போக்கு அதிகமாக இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடும் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு பேராசிரியர் காமினி வீரசிங்க, குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நெருக்கடி

ஈரானுக்கு ஆதரவு வழங்குவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் முன்வந்தால் எண்ணெய் விநியோகம் முழுமையாக சீர்குலையும்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் 2 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பல் உள்ளதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதனால் இலங்கையர்கள் அச்சமடைய தேவையில்லை. இந்த 2 மாத கையிருப்பை மிகவும் அவதானமாக பயன்படுத்த வேண்டும். 2 மாதங்களுக்கு முன்னர் இலங்கை மீண்டும் கொள்வனவு செய்ய வேண்டும்.

அதற்கமைய, சர்வதேச சந்தையின் விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதனால் விலை அதிகரிக்க நேரிடும். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விநியோகமும் சில நேரங்களில் சரிவடையக்கூடும்” என பேராசிரியர் காமினி வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்


இலங்கையில் பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருவது ஏன்? ஆய்வுக் கட்டுரை!



இலங்கையில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள

சிறுமிகள் மத்தியில் பதிவாகியுள்ள குழந்தை கர்ப்பிணிகளில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யபட்டுள்ளது.


கடந்த 2023ஆம் ஆண்டு 163 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கையானது 213 வரை அதிகரித்துள்ளதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.


இதன்படி, 2024ஆம் ஆண்டு பதிவான குழந்தைத் தாய்மார்களுக்கு மத்தியில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எனினும், அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள குழுந்தைத் தாய்மார்களை விடவும், அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தாய்மார்கள் இலங்கையில் இருக்கக்கூடும் என போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக பிரிவிற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.


சிறு வயது காதல் காரணமாக ஏற்படும் சம்பவங்கள்

தற்போது பதிவாகின்ற குழந்தைகள் கர்ப்பமடைவதானது, காதல் தொடர்புகளின் பெறுபேறுகளினால் ஏற்படுகின்ற சம்பவம் என பிரதி போலீஸ் மாஅதிபர் குறிப்பிடுகின்றார்.


''இதில்,16வயதுக்குக் குறைவான சிறுமிகளின் விருப்பத்துடன் இடம் பெறுகின்ற சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையே எமக்குள்ள பிரச்னையாகும். அது துஷ்பிரயோகம் என சட்ட ரீதியாக உரித்தானாலும், அது பலவந்தமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. காதல் ஏற்பட்டு விருப்பத்துடன் இடம்பெற்ற சம்பவங்களாலேயே அந்தச்சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்.''

அவ்வாறனசந்தர்ப்பங்களில் பலவந்தமாக 

இடம்பெற்ற துஷ்பிரயோகங்களில் கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கு வாய்ப்பில்லை.இந்தச் சம்பவங்கள்தொடர்பில் முறைப்பாடு கிடைக்கும்போது, அந்தச் சிறுமி கர்ப்பமடைந்து பல மாதங்கள் ஆகியிருக்கும் எனவும் அவர் கூறுகின்றார்.


''பலவந்தமாக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கட்டாயம்போலீஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள்கிடைக்கும். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும்.


சம்பவம் இடம்பெற்று முதல்

24அல்லது48 மணித்தியாலங்களுக்குள் வருகை தரும் பட்சத்தில், நீதிமன்றம், மருத்துவர்கள் அது தொடர்பானதேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால், அவர்களுடன் சம்பந்தப்பட்ட சிறுமிகள் தொடர்புகளைப் பேணுகின்றமையினால் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால், அவர்கள் அவற்றை மறைத்து காலம் செல்லும் போதே அறிந்துகொள்ள முடிகின்றது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், குழந்தைகள் கர்ப்பமடைந்தால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தவிர்த்து, கர்ப்பத்தைக் கலைப்பதற்கு சட்டத்தின் இயலுமை இல்லை.


நாட்டில் தற்போது பதிவாகின்ற சில சம்பவங்களில், கர்ப்பத்திற்குப் பொறுப்பு கூற வேண்டிய ஆண்கள், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எனவும் பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகாஜயசுந்தர தெரிவிக்கின்றார்.


அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில், இவ்வாறான சம்பவங்களில் 14 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட பெண் குழந்தைகள் உட்படுத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.


குழந்தைத் தாய்மார்களின் குழந்தைகள் ''பாதிக்கப்பட்டவர்களாகவே'' இந்த உலகத்தைக் காண்பதாகக் கூறும் பிரதி போலீஸ் மாஅதிபர், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சமூகத்தின் கவனம் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


''யாரும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதை நான் காணவில்லை. இவர்களை நீதிமன்றம் வேறு யாருக்காவது ஒப்படைத்து விடும். பெரும்பாலும் அவர்களின் குடும்பத்திடமே ஒப்படைக்கப்படும். விருப்பம் என்றால் வளர்த்துக்கொள்ள முடியும்.''


தெளிவின்மையால் ஏற்படுகின்றகுழந்தை கர்ப்பமடைதல்


படக்குறிப்பு,சிறார்கள் தங்களுக்கென ஒரு குடும்பம் என்ற கற்பனை உலகிற்குள் விரைவாகப் பிரவேசிக்க முயல்வதாகக் கூறுகிறார் மாத்தளை மாவட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் நுவன் தோடவத்த

பாலியல் தொடர்பான போதிய தெளிவின்மையே குழந்தைகள் இவ்வாறான பேராபத்திற்கு முகம் கொடுக்கக் காரணம் என பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர கூறுகின்றார்.


''பாலியல் தொடர்பான கல்வி, அது தொடர்பில் காணப்படும் அறிவு மற்றும் தேவையற்ற விதத்தில் கர்ப்பமடைவதைப் பாதுகாத்துக் கொள்வது ஆகியவை குறித்த தெளிவின்மை இதற்கு ஒரு காரணம். பாலியல் உறவைப் பேணும் ஒருவராயின், அவர் கட்டாயமாக கருத்தடை சாதனங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு வயது எல்லை எதுவும் கிடையாது''


''நாங்கள் இந்தச் சம்பங்கள் குறித்துப் பார்க்கும்போது அந்தச் சிறுமிகள் அது தொடர்பில் அறிந்திருப்பதில்லை என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது'' என்பதை விசாரணை அனுபவங்களின் ஊடாக அவர் குறிப்பிட்டார்.


''நாங்கள் இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராயும்போது, குடும்பங்களில் காணப்படும் பிரச்னைகள் குறித்து அதிகளவில் அவதானிக்கின்றோம். பெரும்பாலான சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கின்றார்கள். தாயும், தந்தையும் பிரிந்துள்ளமை அதற்கான காரணம். இவ்வாறான நிலையிலேயே காதலுக்கு மிகவும் விரைவாக அடிமையாகின்றனர்.''


எவ்வாறாயினும், சரியாக இந்த நிலைமைக்கான காரணம் தொடர்பில் கூற முடியாது என போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதானி பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர குறிப்பிடுகின்றார்.


'முறையற்றவிதத்தில் குழந்தைகள்அறிவைப் பெறுகின்றனர்'


படக்குறிப்பு,குழந்தைகளுக்கு அவர்கள் ஆபத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பான தெளிவு வழங்கப்படுவதில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி தோடவத்த.

குழந்தைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நடைமுறை இல்லாமையால், பாலியல் தொடர்பில் முறைசாரா விதத்தில் அவர்கள் அறிவைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் நுவன் தோடவத்த, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.


''பாடசாலை கல்வியில் முறையான விதத்தில் இவற்றைக் கற்பிப்பதில்லை. அதனால், முறைசாரா விதத்தில் அவர்கள் இது தொடர்பான அறிவைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பெரியோரிடம், நண்பர்களிடம், பாலியல் திரைப்படங்களைப் பார்த்து இவ்வாறான அறிவைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தெளிவின்மை காரணமாகவே குழந்தைகள் கர்ப்பமடைகின்றனர். அவ்வாறானவர்களை நாங்கள் சந்திக்கின்றோம்.''


''இலங்கையில் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்குக்கூட இது தொடர்பில் தெரியாது. துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரியவர்களாக இல்லாத போதிலும்கூட, அவர்கள் அது குறித்து அறிந்திருக்க மாட்டார்கள்" என அவர் கூறுகின்றார்.


குழந்தைகள் ஆபத்தில் விழும் சந்தர்ப்பங்கள் தொடர்பான தெளிவு வழங்கப்படுவதில்லை எனக் கூறும் மருத்துவ அதிகாரி தோடவத்த, எதிர்காலத்தைத் திட்டமிடும் வகையிலான கல்வி இல்லாமையானது, பாரிய பிரச்னை எனத் தெரிவிக்கின்றார்.


''துஷ்பிரயோகத்தை ஒருபுறத்தில் வைப்போம். எமது இளைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான குழந்தைகள் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு, 19 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்கென ஒரு குடும்பம் என்ற கற்பனை உலகத்திற்குள் விரைவாகப் பிரவேசிக்க முயல்கின்றனர்.''


''இந்தக் குழந்தைகள் ஆபத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் தெளிவு வழங்கப்படுவதில்லை. உதாரணமாக சமூக ஊடகப் பயன்பாட்டைக் கூற முடிகின்றது. அவ்வாறான இடத்தில் அதிக ஆபத்து எந்த இடத்தில் இருக்கின்றது. அதை புத்திசாதுரியமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பவை எந்தவோர் இடத்திலும் கல்வி முறையில் கற்பிக்கப்படவில்லை'' என அவர் குறிப்பிடுகின்றார்.


குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொடுக்கும் வயது தொடர்பில் டாக்டர் நுவன் தோடவத்தவிடம் வினவப்பட்டது.


''சிறு வயது முதலே, தமது உடலிலுள்ள உறுப்புகள் குறித்த தெளிவு கிடைக்கும் சந்தர்ப்பத்திலேயே, சிறிது சிறிதாக இந்த அறிவை வழங்க ஆரம்பிக்க வேண்டும். மூன்று வயது குழந்தைக்கு மாதவிடாய் சுழற்சி புரிவதில்லை. எனினும், வயிற்றைப் பிடிப்பது, முகத்தைப் பிடிப்பது, மார்பைப் பிடிப்பது புரியும்.''


குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக இது தொடர்பான கல்வியை ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்ட வேலைத் திட்டத்தின் ஊடாக கல்வி முறையில் இவ்வாறான சம்பவங்களைக் குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.


நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். ஆனால் தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள அவரின் அலுவலகத்தில் 05ம் திகதி இடம்பெற்றது.

அடிப்படைச் சம்பளத் திருத்தத்துடன் 1/80 என்ற அடிப்படையில் மேலதிக நேரக் கொடுப்பனவை அவ்வாறே வழங்குதல், விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரிதல் என்பவற்றுக்காக வழங்கப்படும் 20/1 வீதக் கொடுப்பனவை அவ்வாறே முன்னெடுத்தல், 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பை அவ்வாறே முன்னெடுத்தல் உள்ளிட்ட மீளாய்வு தொடர்பான யோசனைகள் மற்றும் வேலைத்திட்ட செயன்முறைகள் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ‘‘உங்களைப் போன்ற அனுபவம்கொண்ட தலைவர் தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்வது பொருத்தமானதாக இருக்கும்’’ என்று கூறியுள்ளனர்.

அதற்கு ரணில் விக்கிரமசிங்க, ‘‘இல்லை. நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். இருந்தபோதும் உங்களுக்குத் தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று பதில் வழங்கியுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, ‘‘நாம் நாட்டுக்காக அவரிடமிருந்து வேலையைப் பெற்றுக்கொள்வோம்’’ என்று வைத்திய அதிகாரிகளுக்குக் கூறியிருக்கிறார்.

 உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் - ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?

முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது.

இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

"ஆரோக்கியமான நாடாக மாறுவதற்கு நாம் உடல் பருமனை சமாளிக்க வேண்டும். அதிக உடல் எடை பல வித பிரச்னைகள் மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கிறது," என்றும் அந்நிகழ்ச்சியில் மோதி பேசினார்.


 

இலங்கை பெண்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்




நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக சிக்கலில் மாட்டித் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு 25 மாவட்டங்களிலும் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட 1000 பெண்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

உளரீதியான சவால்கள்

நாட்டில் 43 சதவீத பெண்கள் உள ரீதியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதும் இதன்போது தெரியவந்துள்ளது. அத்துடன், பெண்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினரின் மதுபான பாவனையினாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, 27.4 வீதமான பெண்கள் அயலவர்களினாலும், 27 சதவீதமான பெண்கள் இனந்தெரியாதோர்களினாலும் 20 வீதமான பெண்கள் உறவினர்களாலும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை மதுசார பாவனைக்கு ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்காக 29 சதவீதமான பெண்கள் பயன்படுத்தப்படுவதாகவும், 34 சதவீதமான பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

 


எந்தன் உயிர் தமிழ்

==================

காற்றாய் அடித்தாலும்

கானலில் காய்ந்தாலும்

எந்தன் உயிர் தமிழ்

எவரும் களைய முடியாது!


கொடியாய் பறக்கிறது,

கோலமாய் மலர்கிறது,

கண்மணிப் பழமொழிகள்

காதலாய் நெகிழ்க்கிறது.


காதலில் நொந்தாலும்

கனலில் நசிந்தாலும்

காற்றில் கிளர்ந்தெழும்

காலமாய் நிற்கும் தமிழ்.


இருண்டு முளைத்தது,

இமயத்தை கடந்தது,

காலத்தால் மறையாத

இனிய மொழி தமிழ்!


காதலாய் கலந்தது,

கருணையாய் மலர்ந்தது,

கவிதையாய் நின்றது,

கங்கைபோல் உயிர்ப்பது!


தமிழே! எனது மொழி,

காலத்தால் அழியாது!

கலைந்து போகாது

 கலையாக வாழ்வது..

.

...கவிதையின் காதலன்.

வேலையற்ற பட்டதாரிகள் - சஜித் பிரேமதாச சந்திப்பு


தமது தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவிக்கும் நோக்கில் கிராம உத்தியோகத்தர்கள் துறையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (04) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

 

அவ்வாறே, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்றைய தினம் சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். 

 

இவ்விடயங்களை பாராளுமன்றத்தில் உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு உறுதியளித்தார்.



Powered by Blogger.