அனோஜனுக்கான உச்ச நீதிமன்ற மனுவை ஒக்டோபர் 17ம் ஆம் திகதிக்கு முன்னமொ, அல்லது அன்றோ சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அது தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவைத் தாக்கல் செய்வதற்கான செலவு சுமார் 6.6 மில்லியன் ரூபாயாக இருக்கும் என்றும், இச்செயல்முறைக்காக ஏற்கனவே சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சட்ட விவகாரங்களுக்கு அரசு வழக்கமாக நிதியுதவி அளிப்பதில்லை என்றாலும், இது ஒரு சிறப்பு வழக்கு என்பதால் அரசாங்கம் இதில் தலையிட்டுள்ளதென அவர் கூறினார்.
சட்டத்தரணிகள் குழு சிக்கலில்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கான சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்ய அங்கு சென்றிருந்த இலங்கை சட்டத்தரணிகள் குழுவினர் சவூதியின் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் ரியாத்தில் சிக்கியுள்ளதாகஆங்கில ஒரு செய்தி கூறுகிறது.
அதன்படி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி அஸார்ட் நவாவி தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி ஹபீல் பாரிஸ்
கொண்ட குழுவினர், மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை இறுதி செய்த பின்னர் நேற்று இலங்கை திரும்பவிருந்தனர்.
ஆனால், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு சவூதி விமான நிலையங்கள் உள்ளானதைத் தொடர்ந்து ரியாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதால், இக்குழுவினர் அங்கு தற்போது சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை ரியாத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
#saudiarabia #SriLankaNews #TamilNews #AnojanSivarasa#hmmirror
இதற்கமைய, 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் 12 மாத காலத்திற்கு 420,000 மெற்றிக் தொன் (±20%) எரிவாயுவை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது. இதன் குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட அளவு 336,000 மெற்றிக் தொன்னாகும்.
குறித்த விநியோகத்திற்காக சர்வதேச போட்டி விலைமுறையின் கீழ் கோரப்பட்ட விலைமனுக்களில் நான்கு விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, காப்புறுதி மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் உள்ளடங்கலாக, ஒரு மெற்றிக் தொன்னுக்கு 133.93 அமெரிக்க டொலர் என்ற ஒப்பந்த விலையில் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அட்டாளைச்சேனை கடற்கரையில் அமைந்துள்ள Marksman விளையாட்டுக் கழக வீரர்களின் கோரிக்கைக்கு அமைய, இன்று (11) அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ASM. உவைஸ் அவர்களின் தலைமையில், சபையின் இயந்திர வளங்களைப் பயன்படுத்தி கடற்கரை விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டது.
கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (CCD) அனுமதி மற்றும் மேற்பார்வையின் கீழ் இப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ மு.பிரதி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான பாறுக் நஜித், கௌரவ உறுப்பினர் அஸ்வர் சாலி, CCD உத்தியோகத்தர் IP. கியாத் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றி, விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் ஆதரவளிப்பது எமது சமூகப் பொறுப்பாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, மகன்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று ஊழல் வழக்குகள் இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இந்த மூன்று வழக்குகளும் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாயை ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் வைப்பு செய்து முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இப்பாகமுவ பகுதியில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவாகக் காணப்பட்டதாகவும், போர் காரணமாக தற்போது டீசல் மற்றும் பெற்றோலின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் ஏப்ரல் மாதம் முதல் டீசல் லீட்டருக்கு 100 ரூபா வீதம் மானியம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவாகக் காணப்பட்டதாகவும், போர் காரணமாக தற்போது டீசல் மற்றும் பெற்றோலின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் ஏப்ரல் மாதம் முதல் டீசல் லீட்டருக்கு 100 ரூபா வீதம் மானியம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அநுர பதிலடி! வெளியான அதிரடி அறிவிப்பு | F
மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் டீசல் லீட்டருக்கு 70 ரூபா மானியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களின் விலை
கடந்த காலங்களைப் போல அதிகளவான ஊழியர்களை நியமிக்காமல், பொறியியலாளர்கள் உள்ளிட்ட 10 பேரை மாத்திரம் புதிதாக இணைத்துக்கொண்டு நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால், அதே விலையில் தங்களால் விற்பனை செய்ய முடியாது எனத் தெரிவித்து தனியார் நிறுவனங்கள் விலை அதிகரிப்பைக் கோருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே ஞானசார தேரருக்குக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காவியுடை நீக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைத் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே.
ஞானசார தேரர் விவகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் குறுகிய அரசியல் இலாபத்துக்காக இனவாதக் கோணத்தில் திசைதிருப்பி வருகின்றன.
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் போது ஜனாதிபதி நீதித்துறை அதிகாரத்தில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சியினர், தற்போது ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதியைத் தலையிடுமாறு அழுத்தம் கொடுப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகின்றது.
இலங்கையில் போலியான சமூக ஊடகக் கணக்குகள் மூலம் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவோர் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கம்ப்யூட்டர் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது!..
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் போலியான கணக்குகளை உருவாக்கி, இன மற்றும் மத மோதல்களைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளையும் போலிச் செய்திகளையும் பரப்பி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய கணக்குகளின் IP முகவரிகள், கணக்கு தொடங்கப்பட்ட விபரங்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் செயல்படும் நபர்களைக் கண்டறிய விசேட தொழில்நுட்ப உதவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்பட்டு வருகின்றன
வெளிநாடுகளில் இருந்தும் எல்லை தாண்டியும் இயக்கப்படும் போலிக் கணக்குகள் மற்றும் இணையவழி வெறுப்புப் பிரச்சாரங்களைக் கண்டறிந்து தடுத்து நிறுத்த இத்தகைய பன்னாட்டு ஒருங்கிணைப்புகள் இலங்கைக்கு உதவியாக அமைகின்றன.
கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முதலாவது இருதரப்பு சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் 2026 அக்டோபர் 6 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல், சைபர் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் விவாதித்தனர்.
• கொழும்பில் உள்ள அமைச்சரவை மற்றும் உயர் மட்ட அலுவலக வளாகத்தில் இந்த உச்சிமாநாடு நடைபெற்றது.
• கலந்து கொண்டவர்கள்: இக்கூட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் உயர் மட்ட சைபர் பாதுகாப்பு அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அரசாகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஒக்டோபர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சுமார் 60 அதிகாரிகள் பங்கேற்றனர்.
நீர்த்தேக்கப் பகுதிகள் மற்றும் புதர்நிலங்களில் வைக்கப்பட்டிருந்த விலங்குப் பொறிகள் மற்றும் வெடிபொருள் பொறிகள் அகற்றப்பட்டன. சட்டவிரோத துப்பாக்கிகள், வேட்டைப் பொறிகள், இறைச்சி மற்றும் விலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருந்த சந்தேகநபர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று, இன்று (11) அதிகாலை கந்தளாய் - ஹபரணை பிரதான வீதியின் அலுத்ஓயா பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது.
அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டமையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், தீப்பற்றியதில் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், தீயணைப்புப் பிரிவினரும் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
மின் கசிவு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பல முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்கள் பாரிய அளவு சேதம்
அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் யமெனிலுள்ள சனா விமான நிலையத்தில் ஈரானின்
விமானம் தரை இறங்குவதைத் தடுத்த சவுதி ஆதரவுப் படையினரால் வந்த வினை தான்
இப்போது போராக மாறி உள்ளது
இந்தப் போர் உலகளவிலான எரிபொருள் சிக்கலை மேலும் தீவிரப்படுத்துமென பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சவுதி வான்பாதுகாப்புப் படையினர்,
ஹவுதி ப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள, 130 இடங்களை இனங்கண்டு 100 போர் விமானங்களைக் கொண்டு, பெரும் தாக்குதலை நடத்தியுளது சவுதி
இந்தத் தாக்குதலில் பொது மக்கள் உட்பட பல ஹவுதி போராளிகளும் கொல்லப்பட்டதோடு, பல அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக சவுதியிலுள்ள விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பொருளாதார மையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்களென பல முக்கிய இடங்களைத் ஹௌதிப் படைகள் தாக்கியழித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மொனராகலை: மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில், 49 வயதுடைய பெண் ஆசிரியை ஒருவருக்கு 8 ஆண்டுகள் கட்டாய சிறைத் தண்டனை விதித்து மொனராகலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதியால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக 'லங்காதீப' செய்திகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றம் பிறப்பித்த இதர உத்தரவுகள்:
தலா 50,000 ரூபாய் வீதம் அபராதம்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 250,000 ரூபாய் வீதம் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நட்டஈடு (மொத்தம் ரூ. 750,000).
சம்பவத்தின் பின்னணி:
கடந்த 2019 ஆம் ஆண்டு, குறித்த ஆசிரியை பாடசாலையிலிருந்து மாணவனைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹிந்திகியுல, மொனராகலை பகுதியைச் சேர்ந்தவரும், இரண்டு குழந்தைகளின் தாயுமான குறித்த ஆசிரியைக்கு எதிராக சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
A9 வீதி புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் பிஞ்சுக் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன
விபத்தில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில்/சிகிச்சை பலனின்றி குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த தாய் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, வவுனியா பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை - விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ஹெல்மெட் & பாதுகாப்பு - இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் (Helmet) அணிவது கட்டாயம். அதுவும் குழந்தைகளுடன் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை!
இரவு/மழைக்காலப் பயணம் - வீதி மூடுபனி அல்லது மழையினால் வழவழப்பாக இருக்கும் போது மேலதிக அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துங்கள்.
இஸ்லாமிய மார்க்க இழிவாக பேசியதால் போலீசார் கைது செய்து, மேலதிக விசாரணைக்காகப் பொது வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அரபு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
VIP என அழைக்கப்படுபவர், அவருக்குச் சிம் கார்டு பெற்றுக்கொடுத்தவர் அல்லது இந்தச் செயலுக்கு உதவியவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து இதுவரை உறுதியான அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.போலீசார் நடவடிக்கை
இன்ஷா அல்லாஹ்! உண்மை வெளிவரட்டும். சட்டப்படி நீதி நிலைநாட்டப்படட்டும்.
📺 சவூதி செய்தி ஊடகத்தின் அரபு வீடியோவைப் பார்த்து, செய்தியின் உண்மையான பின்னணியை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
#SaudiArabia #SaudiNews #TamilNews #IslamicNews #SriLankaTamil #hmmirror
ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த றசீத் என்பவர், தனது தொழிலாக தினமும் துவிச்சக்கர வண்டியில் பலசரக்குப் பொருட்களை எடுத்துச் சென்று காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பகுதிகளில் வியாபாரம் செய்து, வரும் ஏழை வியாபாரி
ஆனால், கடந்த புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில், வழமையான தனது தொழிலுக்காகச் சென்று கொண்டிருந்தபோது,
பிரதான வீதியில் வைத்து இடைநிறுத்தி இனம் தெரியாத பலர் ஒன்றுகூடி அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்கள்
அதிகாலை இருள் சூழ்ந்திருந்த பொழுதில் இத் தாக்குதல் இடம் பெற்றிருந்தமையினாலும், திடீரென இடம் பெற்றமையினாலும் இதில் ஈடுபட்டவர்களை அவருக்கு அடையாளம் தெரிந்திருக்கவில்லை
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் அன்றாட தொழில் மூலம் குடும்பத்தை நடாத்தி வந்த நிலையில் இவ்வாறு முடக்கப்பட்டுள்ள இவருக்கான நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்கபாபட வேண்டும் .
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை105 அமெரிக்க டொலர் மட்டத்தை கடந்துள்ளது
இன்றைய வர்த்தகத்தில் Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு US$104.75 வரை உயர்ந்ததாக Reuters தெரிவித்துள்ளது. WTI கச்சா எண்ணெயும் US$92.28 வரை உயர்ந்தது.
மேலும், அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட வானிலை காரணமாக எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறுகளும் விலை உயர்வுக்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#CrudeOil #OilPrices #GlobalMarkets #EnergyMarket #WorldEconomy #MarketNews
#hmmirror