இஸ்லாமிய மார்க்க இழிவாக பேசியதால் போலீசார் கைது செய்து, மேலதிக விசாரணைக்காகப் பொது வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அரபு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
VIP என அழைக்கப்படுபவர், அவருக்குச் சிம் கார்டு பெற்றுக்கொடுத்தவர் அல்லது இந்தச் செயலுக்கு உதவியவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து இதுவரை உறுதியான அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.போலீசார் நடவடிக்கை
இன்ஷா அல்லாஹ்! உண்மை வெளிவரட்டும். சட்டப்படி நீதி நிலைநாட்டப்படட்டும்.
📺 சவூதி செய்தி ஊடகத்தின் அரபு வீடியோவைப் பார்த்து, செய்தியின் உண்மையான பின்னணியை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
#SaudiArabia #SaudiNews #TamilNews #IslamicNews #SriLankaTamil #hmmirror
மலேசியா மணிப்பால் பல்கலைக்கழக மருத்துவக் கற்கைக்கு அட்டாளைச்சேனை மாணவன் இமாட் அஹமட் தெரிவு.
-ஐ.எல்.எம்.றிஸான்-
மலேசியாவிலுள்ள மணிப்பால் பல்கலைக்கழக கல்லூரி (மலாக்கா வளாகம்) மருத்துவ பட்டக் கற்கைக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாணவன் முகம்மட் நக்பர் இமாட் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியா மணிப்பால் பல்கலைக்கழக கல்லூரியில், ஓக்டோபர் 12ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள மருத்துவக் கற்கை பாடநெறிக்காக, மாணவன் இமாட் அஹமட் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா பயணமானார்.
சுமார் 10 அரைத்தேர்வு காலாண்டு கற்கையைக் கொண்ட எம்.பி.பி.எஸ் மருத்துவ பட்டக் கற்கையானது 05 வருடங்களைக் கொண்டது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற மலேசியா, மணிப்பால் பல்கலைக்கழக கல்லூரி வழங்கும் இக்கற்கைக்கு இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் அட்டாளைச்சேனை மாணவன் இமாட் அஹமட்டும் அடங்குவார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை மாணவர்களுக்கு மலேசியா, மணிப்பால் பல்கலைக்கழக கல்லூரி நடாத்திய அறிமுக நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்கை உள்ளீடுகளை வழங்கி வைத்தனர்.
குறித்த மருத்துவ பீடத்திற்கு இலங்கையிலிருந்து அதிகளவு எண்ணிக்கையான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும். நாடளாவிய ரீதியில் சுமார் 32 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் இமாட் அஹமட், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வைத்தியர் கே.எல்.எம்.நக்பர், வைத்தியர் பறூஸா நக்பர் தம்பதியினரின் புதல்வராவார்.
ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விதம் தொடர்பில் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதிக்கும் மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு
ஜப்பானில் முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கத்திற்கான நிலம் தர முடியாது உங்கள் ஜனாஸாவை அடக்கம் செய்ய விரும்பினால், அவர்களின் சொந்த நாடுகளுக்கு உடல்களை எடுத்துச் சென்று சொந்தச் செலவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜப்பானிய அரசியல்வாதி மிசுஹோ உமேமுரா தெரிவித்த பேச்சு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் பெரும்பாலும் சடலம் எரிக்கும் முறையைப் பின்பற்றும் நாடு என்றும், நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமான இறுதிச்சடங்குகள் சடல எரிப்பு முறையிலேயே நடைபெறுகின்றன என்றும் உமேமுரா குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களுக்கான புதிய அடக்க இடங்களை அமைப்பது நிலப்பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் வாதிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தினர் தங்களது மத நடைமுறைக்கு ஏற்ப உடல்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை ஜப்பானில் ஏற்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஜப்பானில் முஸ்லிம் அடக்கத்திற்கான இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சில குடும்பங்கள் தொலைதூர பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், ஜப்பானில் முஸ்லிம்களின் அடக்க உரிமை தொடர்பான விவகாரம் அரசியல் மற்றும் சமூக விவாதமாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குழுவில் இன்றே இணைந்து கொள்ளுங்கள். 👇👇👇👇👇👇 Whatsapp குழுவில் இணையுங்கள் 👈
#HM mirror #Japan #Muslims #Islam #MuslimBurial #JapanNews #WorldNews
(றாசிக் நபாயிஸ்,
ஏ.எல்.எம். ஷினாஸ்,
முஜீப் சத்தார்)
மருதமுனையின் மூத்த இலக்கியவான் மர்ஹும்
புலவர்மணி ஆ.மு ஷரிபுத்தீனின் இரண்டாவது மகனான காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் 35வது நூலான "அகர முதல
குறள்கள் 1000" எனும் நூல் வெளியீடும் இலக்கிய அரங்கமும்
மருதமுனை
அல்-மனார் மத்திய கல்லூரியின் சுபைர் இப்றாகீம் மாநாட்டு மண்டபத்தில் றிஸ்வி மஹ்மூத் ஷரிபுத்தீனின் ஒருங்கிணைப்பில்
முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளரும் சட்டத்தரணியும் கவிஞருமான
எம்.எஸ்.எம். ஜமீலின் தலைமையில் நேற்று (04) இடம் பெற்றது.
இந்நிகழ்வின்
தொடக்கவுரை பொறியிலாளரும் கவிஞருமான
நியாஸ் ஏ.சமத் நிகழ்த்த
"ஜின்னாஹ்வின் கவிப்புலம்" பற்றிய
வெளியீட்டுரை
பாவேந்தல் பாலமுனை பாரூக்
நிகழ்த்த, "கம்பன் வழியில் காப்பியக்கோ" எனும் சிறப்புரையை
மனிதவள ஆலோசகரும் உளவியல் ஆய்வாளருமான
ரக்ஷானா ஷரீபுத்தீன் நிகழ்த்த, "உரை நடையில் ஜின்னாஹ்" எனும்
நூலாய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளரும் எழுத்தாளருமான
கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் நிகழ்த்தினார்.
இந்நூல் வெளியீட்டின் போது
"அருணோதய வாசல்"
எனும் தலைப்பில் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தரும்
சிரேஷ்ட கவிஞருமான மருதமுனை ஹஸன் அவர்களின் தலைமையில்
கவியரங்கம் ஒன்றும் இடம்பெற்றது.
இக்கவியரங்கில் மூத்த
கவிஞர்களான
அக்கரைப்பக்கியன், எம்.ஏ.ஏ.கரீம் மற்றும் மாஜிதா தவ்பீக் ஆகியோர் பங்கு பற்றி தமது கவிதைகளை அரங்கேற்றினர்.
இந்நிகழ்வுக்கு இலக்கிய அதிதிகள், கவிஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜின்னா
ஷரீபுத்தீனின் குடும்ப உறவுகள் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வின்
நிகழ்ச்சித் தொகுப்பை
திக்ரா ஹாஜர் ஷரீபுத்தீன் தொகுப்பு வழங்கினார்.
• அனோஜனின் சவூதி வழக்கறிஞர்கள் மற்றும் சவூதி சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
• சவூதி சட்டத்தரணி சங்கம் இரண்டின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
• சவூதி உச்ச நீதிமன்றத்தில் விரைவாக மேல்முறையீடு செய்வதற்கான சட்ட வழிகளை ஆராய்வது
இவர்கள் இருவரும் தமது சொந்த செலவில், அரசாங்கத்தின் விசேட இராஜதந்திர பிரதிநிதிகளாக செல்கின்றனர்.
மற்ற இருவரும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறுவது - அவர்கள் வெளிவிவகார அமைச்சின் சட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சவூதி சட்டத்தில் அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள்.
• உச்ச நீதிமன்றத்தில் இப்போது பைசர் முஸ்தபா, உபுல் குழு செய்யப்போவது: "அனோஜன் உடனே நீக்கினார், மன்னிப்பு கேட்டார், மீண்டும் செய்ய மாட்டார் - எனவே மரண தண்டனைக்கு பதில் சிறை தண்டனையே போதும்" என்று வாதிடுவது.
பகிரங்கமாக "அனோஜனை விடுதலை செய்யுங்கள்" என்று கத்தாமல்,
• "அவர் மனந்திரும்பிவிட்டார், இஸ்லாத்தை மதிக்கிறார்"
• "இஸ்லாத்தில் மன்னிப்பு தான் பெரிய பண்பு"
• "இலங்கை - சவூதி நட்புக்காக கருணை காட்டுங்கள்"
என்று இஸ்லாமிய அடிப்படையிலேயே மன்னிப்பு கேட்கிறார்கள்.
பைசர் முஸ்தபா வைக்கும் கோரிக்கை - "சவூதி சட்டத்தை மதிக்கிறோம், ஆனால் கருணை காட்டுங்கள்" என்று.
இது நல்ல நகர்வு சட்டம் பேசாமல் நல்ல முறையில் மன்னிப்பு கோருவது ..சட்டம் பேசினால் வெற்றி பெற முடியாது என்பது இரண்டும் ஜனாதிபதி சட்டதரணிகளுக்கும் தெரியும் !
அதனால் குறைந்த சிறை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது!
3வது அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் விரைகிறது!”
ஆம். 2026 அக்டோபர் 2 நிலவரப்படி, அமெரிக்கா 3வது aircraft carrier strike group-ஐ மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி வருகிறது..
அது USS Theodore Roosevelt தலைமையிலான carrier strike group.
அதனுடன் USS Makin Island amphibious readiness group-மும் செல்கிறது. இந்தப் படைப்பிரிவுகளில் சேர்த்து 7,000-க்கும் மேற்பட்ட sailors + சுமார் 2,000 Marines இருப்பதாக Washington போஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த deployment-ல் சுமார் 9,000–10,000 கூடுதல் அமெரிக்கப் படையினர் வரக்கூடும் என்று Wall Street Journal தெரிவித்துள்ளது.
• , இந்தப் படைகள் மத்திய கிழக்கில் அக்டோபர் இறுதிக்குள் இருக்கக்கூடும் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
• மற்றொரு சமீபத்திய தகவலில், நவம்பர் இறுதிக்குள் மூன்று aircraft carriers ஈரானைச் சுற்றியுள்ள பகுதியில் நிலைநிறுத்தப்படலாம் என்று அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.
அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல். இது செப்டம்பர் 27 அன்று San Diego-விலிருந்து புறப்பட்டது; மத்திய கிழக்கு நோக்கிச் செல்கிறது.
, நவம்பர் இறுதிக்குள் மூன்று aircraft carriers மற்றும் இரண்டு amphibious landing groups ஈரானைச் சுற்றிய பகுதியில் நிலைநிறுத்தப்படலாம்.
இதனால் உலக எண்ணெய் விநியோகத்துக்கு மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஈரானின் சமீபத்திய peace proposal-ஐ நிராகரித்துள்ளார். மேலும் நவம்பர் 3 அமெரிக்க midterm தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான குண்டுவீச்சை மீண்டும் அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளார்.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 60ஆம் பிரிவின் கீழ், பிடியாணையைத் தவிர்த்து வரும் ஒரு நபர் குறித்த இடத்திலும் நேரத்திலும் முன்னிலையாக வேண்டும் எனக் கோரி, குறைந்தபட்சம் 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிமன்றம் எழுத்துப்பூர்வ பிரகடனத்தை வெளியிட முடியும்.
இவ்வாறான பிரகடனம் வெளியிடப்பட்ட பின்னரும் குறித்த நபர் முன்னிலையாக தவறினால், 61 ஆம் பிரிவின் கீழ், அந்நபருக்குச் சொந்தமான அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான கட்டளையை நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடிதம் ஒன்றின் மூலம் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்
தனக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் அடங்கிய கடிதம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு கிடைத்தமையையடுத்து, அது குறித்து நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று கோட்டே நீதவானிடம் நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியின் செயலாளருக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலித் ஜெயவீர மீது நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விவகாரத்தில், கோட்டை நீதவான் வழங்கிய “முதற்கண் நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளது” என்ற கண்டறிதலை சவால் செய்து டிலித் ஜெயவீர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இன்று அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே (dismissed in limine) மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
————————————————
பானந்துறை, மஹாநாம வீதியின் கிளை வீதியொன்றில் பானந்துறை பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த வேளையில், இனந்தெரியாத நபர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்று (29) இரவு 10.00 மணியளவில் குறித்த தொழிலதிபர் தனது இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் காரில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது, வீட்டிற்கு அருகில் வைத்து வேறொரு காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் தொழிலதிபரைத் தாக்கி, அவரது காரின் கண்ணாடிகளை உடைத்து இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக பானந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொழிலதிபரின் மகள்கள் இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், காயமடைந்த மனைவி பானந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத குழுவினர் தொழிலதிபரை கடத்த முயன்றபோது, தொழிலதிபர் தனது காரை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியுள்ளார். இதன்போது கார் வீதியிலிருந்த சாக்கடை ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தொழிலதிபரின் காரின் கண்ணாடிகளை உடைத்து, அவரை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளனர். பின்னர், தாங்கள் வந்த காரில் அவரை ஏற்றிப் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொழிலதிபரின் உறவினர் ஒருவராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பானந்துறை தெற்கு பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் தொழிலதிபரின் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பானந்துறை பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Panadura
#PanaduraNews
#BreakingNewsLK
#CrimeNews
#Kidnapping
#SriLankaNews
#HM mirror
30-09-2026
இந்த நிலையில் வணி வளாகங்கள் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பாரிய சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மில்லியன் கணக்கான நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 24 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 01.10 மணிக்கு சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SQ-469 விமானம் மூலம் அவர் நாட்டை விட்டுப் புறப்பட்டிருந்தார்.
அத்துடன், அது தப்பியோட்டம் அல்லவென்றும், இதய நோய்க்கு சிகிச்சை பெற்றுவிட்டு 18 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பி 24 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு முன்பு ஆஜராவார் என்றும் அவரது வழக்கறிஞரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளருமான வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்திருந்தார்.
எப்படியிருப்பினும் உறுதியளித்தபடி 18 ஆம் திகதி நாட்டுக்குத் திரும்பாத அவர், 24 ஆம் திகதியும் கடந்து இன்றுவரை சிங்கப்பூரிலேயே தங்கியுள்ளார்.
அவர் சிங்கப்பூரில் கண் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டதாகவும், மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பின்னர் கண்ணுக்கு ஓய்வும் பாதுகாப்பும் தேவையாகும். அதனால் வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் கூறி புதிய கதையொன்றை அவரது வழக்கறிஞர் முன்வைத்துள்ளார்.
சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைகளை பெறுவதாக கூறப்பட்டாலும், அது தொடர்பான எந்தவொரு மருத்துவச் சான்றிதழ்களையும் அவரது தரப்பு சமர்ப்பிக்கத் தவறியுள்ளது.
இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வணிக வளாகத்திற்கு அருகில் அவர் மற்றொரு பெண்ணுடன் சென்று கொண்டிருந்ததை காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 25 ஆம் திகதி அவர் முஸ்லிம் பெண் போன்று மாறுவேடமிட்டு வணிக வளாகம் செல்லும் மற்றொரு காணொளியும் வெளியாகியுள்ளது
இதனால் அவர் பொய்யான காரணங்களை கூறி பொலிஸாரையும் பொதுமக்களையும் ஏமாற்றியுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக கொலை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிசார் எச்சரிக்கை!
வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களின் பின்னணியை முறையாக ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே சொத்துக்களை வழங்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, வாடகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்களில் இருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சில சொத்து உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களின் பின்னணியை உரிய முறையில் ஆராயாமல் தமது சொத்துக்களை வாடகைக்கு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாடகைக்கு வழங்கப்பட்ட சொத்தில் குற்றச் செயல்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில், சம்பவத்தின் தன்மை மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு அமைய சொத்து உரிமையாளர்களும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், தமது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, தமது பகுதியில் புதிதாக அறிமுகமில்லாத நபர்கள் நடமாடுவதை அவதானித்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களை கண்டறிந்து தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றி வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருட்களின் கிடைப்பை குறைத்து, பொதுமக்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் தொடர்ச்சியான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaPolice #