Showing posts with label '. Show all posts

இலங்கையின் தற்போதைய நிதிக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான பொருளாதார விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் (CBSL) அதற்கான விளக்கமளிப்பதற்கான விசேட செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திகதி அறிவிப்பு 

குறித்த செயலமர்வு, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், ஜூன் 10 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பிரதி தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மீதான குழுவின் கூட்டத்தில் குறித்த செயலமர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

 

 


கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 வரை கடவுச்சீட்டுகளும் வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1000 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாவும் வழக்கமான சேவைக்கு 10,000 ரூபாவும் அறவிடப்படுகிறது. கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், கால தாமதங்கள் ஏற்படக்கூடும்.

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது

எனவே, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் கவனம் செலுத்தி, அவை தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

16 வயதில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பல ஆண்டுகளில் பின் உடல் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதனை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும்.

மேலும் ஒரு நாள் சேவை மற்றும் வழக்கமான சேவையின் கீழ் ஒரு நாளைக்கு சராசரியாக 4000 முதல் 5000 வரை அடையாள அட்டைகள் வழங்கப்படுவதமாக என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


 இலங்கையில் ஏற்படும் திடீர் விபத்துகளால் நாளாந்தம் சராசரியாக 29 பேர் உயிரிழக்கின்றனர் என சமூகநல சுகாதார நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு நபர் விபத்தால் மரணம் அடைகின்றார்.

இது தவிர்க்கக்கூடிய ஒரு பேரழிவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை, அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, விபத்துத் தடுப்பு குறித்து பேசியபோது வைத்தியர் சிறிதுங்கா வெளியிட்டார்.

வாராந்த புள்ளிவிபரத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன:

• ஆண்டுக்கு சுமார் 10,600 பேர் திடீர விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

• இதனுடன், 1,500 பேர் தவறி விழுந்து ஏற்படும் காயங்களால் மரணமடைகின்றனர்.

இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வழிகள் இருக்கின்றன” என வைத்தியர் சிறிதுங்கா வலியுறுத்தினார்.

அதற்காக, பொதுமக்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் விரைவில் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 



 நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார்.

 

1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறினார்.


 பாணந்துறை - ஹிரான பொலிஸ் பிரிவின் மாலமுல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இன்று (11) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தப்பியோட்டம் 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காயமடைந்த நபர் மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மற்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது



கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ், நேற்று(09) முன்னிரவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கற்பிட்டி பிரதேச பல்நோக்கு கூட்டுறவு சங்க உத்தியோகத்தர் ஒருவரின் கடமையை செய்யவிடாது அழுத்தம் கொழுத்ததாக அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.


அதனையடுத்து, அரசாங்க ஊழியரின் கடமையில் குறுக்கீடு மேற்கொண்ட குற்றச்சாட்டில் நுரைச்சோலை பொலிஸார் மின்ஹாஜை கைது செய்துள்ளனர்.


தவிசாளர் 


இவர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது...!!!


அதன்படி, மேற்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை நாளை, (2025 ஏப்ரல் 02) வரை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.


வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஆண்டு டிசம்பரில், உள்ளூராட்சித் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


முன்னர் வேட்புமனுக்களை சமர்ப்பித்த சிலர் காலமானதாலும், சிலர் நாட்டை விட்டு வெளியேறியதாலும் அல்லது கட்சி மாறியதாலும் புதிய வேட்புமனுக்களை அழைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.


இருப்பினும், இந்த முடிவை நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது.

Powered by Blogger.