பவர் ஸ்டார் விளையாட்டு கழகம் தின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது
இந்த நிகழ்வு ஒலுவில் அமைந்துள்ள OSAKA LANKA GUEST HOUSE மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹபீப் முஹம்மட் பவுண்டேஷன் நிர்வாகிகளான H.M. மக்கீன் நீதிமன்ற உத்தியோகத்தர் y.றிதாஸ் தபால் அலுவலக உத்தியோகத்தர் மற்றும் கழகத்தின் தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள், வீரர்கள் மற்றும் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
எமது கழகத்தின் புதிய சீருடைக்கான முழுமையான அனுசரணையை வழங்கிய HM FOUNDATION நிறுவனத்தின் நிர்வாகிFAYAS MOWLAFI அவர்களுக்கு POWER STAR SPORTS CLUB சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல், இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த கழகத்தின் உயர்பீட உறுப்பினர்கள், நிர்வாகத்தினர் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.பவர் ஸ்டார் விளையாட்டு கழகம் நிர்வாகம்.

