Showing posts with label கிழக்கு மாகாணம். Show all posts


 


அனோஜனுக்கான உச்ச நீதிமன்ற மனுவை ஒக்டோபர் 17ம் ஆம் திகதிக்கு முன்னமொ, அல்லது அன்றோ சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அது தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனுவைத் தாக்கல் செய்வதற்கான செலவு சுமார் 6.6 மில்லியன் ரூபாயாக இருக்கும் என்றும், இச்செயல்முறைக்காக ஏற்கனவே சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட சட்ட விவகாரங்களுக்கு அரசு வழக்கமாக நிதியுதவி அளிப்பதில்லை என்றாலும், இது ஒரு சிறப்பு வழக்கு என்பதால் அரசாங்கம் இதில் தலையிட்டுள்ளதென அவர் கூறினார்.

சட்டத்தரணிகள் குழு சிக்கலில்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கான சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்ய அங்கு சென்றிருந்த இலங்கை சட்டத்தரணிகள் குழுவினர் சவூதியின் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் ரியாத்தில் சிக்கியுள்ளதாகஆங்கில ஒரு செய்தி கூறுகிறது.

அதன்படி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி அஸார்ட் நவாவி தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும,  ஜனாதிபதி சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் 

கொண்ட குழுவினர், மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை இறுதி செய்த பின்னர் நேற்று இலங்கை திரும்பவிருந்தனர்.

ஆனால், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு சவூதி விமான நிலையங்கள் உள்ளானதைத் தொடர்ந்து ரியாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதால், இக்குழுவினர் அங்கு தற்போது சிக்கிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை ரியாத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.


#saudiarabia #SriLankaNews #TamilNews #AnojanSivarasa#hmmirror


‎ பல முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்கள் பாரிய அளவு சேதம்

‎ அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

‎அண்மையில் யமெனிலுள்ள சனா விமான நிலையத்தில் ஈரானின்

‎ விமானம் தரை இறங்குவதைத் தடுத்த சவுதி ஆதரவுப் படையினரால் வந்த வினை தான்

‎ இப்போது போராக மாறி உள்ளது  

‎இந்தப் போர் உலகளவிலான எரிபொருள் சிக்கலை மேலும் தீவிரப்படுத்துமென பொருளாதார  ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

‎சவுதி வான்பாதுகாப்புப் படையினர்,

‎ ஹவுதி ப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள, 130 இடங்களை இனங்கண்டு 100 போர் விமானங்களைக் கொண்டு, பெரும் தாக்குதலை நடத்தியுளது சவுதி

‎இந்தத் தாக்குதலில் பொது மக்கள் உட்பட பல ஹவுதி  போராளிகளும் கொல்லப்பட்டதோடு, பல அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

‎இதற்குப் பதிலடியாக சவுதியிலுள்ள விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பொருளாதார மையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்களென பல முக்கிய இடங்களைத் ஹௌதிப் படைகள் தாக்கியழித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 


மலேசியா மணிப்பால் பல்கலைக்கழக மருத்துவக் கற்கைக்கு அட்டாளைச்சேனை மாணவன் இமாட் அஹமட் தெரிவு.

-ஐ.எல்.எம்.றிஸான்-

மலேசியாவிலுள்ள மணிப்பால் பல்கலைக்கழக கல்லூரி (மலாக்கா வளாகம்) மருத்துவ பட்டக் கற்கைக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாணவன் முகம்மட் நக்பர் இமாட் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மலேசியா மணிப்பால் பல்கலைக்கழக கல்லூரியில், ஓக்டோபர் 12ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள மருத்துவக் கற்கை பாடநெறிக்காக, மாணவன் இமாட் அஹமட் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா பயணமானார்.

சுமார் 10 அரைத்தேர்வு காலாண்டு கற்கையைக் கொண்ட எம்.பி.பி.எஸ் மருத்துவ பட்டக் கற்கையானது 05 வருடங்களைக் கொண்டது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற மலேசியா, மணிப்பால் பல்கலைக்கழக கல்லூரி வழங்கும் இக்கற்கைக்கு இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் அட்டாளைச்சேனை மாணவன் இமாட் அஹமட்டும் அடங்குவார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை மாணவர்களுக்கு மலேசியா, மணிப்பால் பல்கலைக்கழக கல்லூரி நடாத்திய அறிமுக நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்கை உள்ளீடுகளை வழங்கி வைத்தனர். 


குறித்த மருத்துவ பீடத்திற்கு இலங்கையிலிருந்து அதிகளவு எண்ணிக்கையான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும். நாடளாவிய ரீதியில் சுமார் 32 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.


அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் இமாட் அஹமட், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வைத்தியர் கே.எல்.எம்.நக்பர், வைத்தியர் பறூஸா நக்பர் தம்பதியினரின் புதல்வராவார்.

 


ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விதம் தொடர்பில் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, குறித்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதிக்கும் மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு

 


ஜப்பானில் முஸ்லிம்களின் ஜனாஸா  அடக்கத்திற்கான நிலம் தர முடியாது உங்கள் ஜனாஸாவை அடக்கம் செய்ய விரும்பினால், அவர்களின் சொந்த நாடுகளுக்கு உடல்களை எடுத்துச் சென்று சொந்தச் செலவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜப்பானிய அரசியல்வாதி மிசுஹோ உமேமுரா தெரிவித்த பேச்சு  பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் பெரும்பாலும் சடலம்  எரிக்கும்  முறையைப் பின்பற்றும் நாடு என்றும், நாட்டில் 99 சதவீதத்திற்கும் அதிகமான இறுதிச்சடங்குகள் சடல எரிப்பு முறையிலேயே நடைபெறுகின்றன என்றும் உமேமுரா குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களுக்கான புதிய அடக்க இடங்களை அமைப்பது நிலப்பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் வாதிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தினர் தங்களது மத நடைமுறைக்கு ஏற்ப உடல்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை ஜப்பானில் ஏற்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஜப்பானில் முஸ்லிம் அடக்கத்திற்கான இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சில குடும்பங்கள் தொலைதூர பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், ஜப்பானில் முஸ்லிம்களின் அடக்க உரிமை தொடர்பான விவகாரம் அரசியல் மற்றும் சமூக விவாதமாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குழுவில் இன்றே இணைந்து கொள்ளுங்கள். 👇👇👇👇👇👇 Whatsapp குழுவில் இணையுங்கள் 👈


#HM mirror #Japan #Muslims #Islam #MuslimBurial #JapanNews #WorldNews

 



(றாசிக் நபாயிஸ்,

ஏ.எல்.எம். ஷினாஸ், 

முஜீப் சத்தார்)

மருதமுனையின் மூத்த இலக்கியவான் மர்ஹும்

புலவர்மணி ஆ.மு ஷரிபுத்தீனின் இரண்டாவது மகனான காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் 35வது நூலான "அகர முதல 

குறள்கள் 1000" எனும் நூல் வெளியீடும் இலக்கிய அரங்கமும்

மருதமுனை

அல்-மனார் மத்திய கல்லூரியின் சுபைர் இப்றாகீம் மாநாட்டு மண்டபத்தில் றிஸ்வி மஹ்மூத் ஷரிபுத்தீனின் ஒருங்கிணைப்பில்

முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளரும் சட்டத்தரணியும் கவிஞருமான

எம்.எஸ்.எம். ஜமீலின் தலைமையில் நேற்று (04) இடம் பெற்றது.


இந்நிகழ்வின்

தொடக்கவுரை பொறியிலாளரும் கவிஞருமான

நியாஸ் ஏ.சமத் நிகழ்த்த

"ஜின்னாஹ்வின் கவிப்புலம்" பற்றிய

வெளியீட்டுரை 

பாவேந்தல் பாலமுனை பாரூக்

நிகழ்த்த, "கம்பன் வழியில் காப்பியக்கோ" எனும் சிறப்புரையை 

மனிதவள ஆலோசகரும் உளவியல் ஆய்வாளருமான

ரக்ஷானா ஷரீபுத்தீன் நிகழ்த்த, "உரை நடையில் ஜின்னாஹ்" எனும் 

நூலாய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளரும் எழுத்தாளருமான

கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் நிகழ்த்தினார்.

இந்நூல் வெளியீட்டின் போது

"அருணோதய வாசல்"

எனும் தலைப்பில் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தரும்

சிரேஷ்ட கவிஞருமான மருதமுனை ஹஸன் அவர்களின் தலைமையில்

கவியரங்கம் ஒன்றும் இடம்பெற்றது.

இக்கவியரங்கில் மூத்த 

கவிஞர்களான

அக்கரைப்பக்கியன், எம்.ஏ.ஏ.கரீம் மற்றும் மாஜிதா தவ்பீக் ஆகியோர் பங்கு பற்றி தமது கவிதைகளை அரங்கேற்றினர்.

இந்நிகழ்வுக்கு இலக்கிய அதிதிகள், கவிஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜின்னா

ஷரீபுத்தீனின் குடும்ப உறவுகள் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வின்

நிகழ்ச்சித் தொகுப்பை

திக்ரா ஹாஜர் ஷரீபுத்தீன் தொகுப்பு வழங்கினார்.


   

• அனோஜனின் சவூதி வழக்கறிஞர்கள் மற்றும் சவூதி சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை 

• சவூதி சட்டத்தரணி சங்கம் இரண்டின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

• சவூதி உச்ச நீதிமன்றத்தில் விரைவாக  மேல்முறையீடு செய்வதற்கான சட்ட வழிகளை ஆராய்வது 

இவர்கள் இருவரும் தமது சொந்த செலவில், அரசாங்கத்தின் விசேட இராஜதந்திர பிரதிநிதிகளாக செல்கின்றனர்.

மற்ற   இருவரும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறுவது - அவர்கள் வெளிவிவகார அமைச்சின் சட்ட பிரிவை சேர்ந்தவர்கள்  சவூதி சட்டத்தில் அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள்.

• உச்ச நீதிமன்றத்தில் இப்போது பைசர் முஸ்தபா, உபுல் குழு செய்யப்போவது: "அனோஜன் உடனே நீக்கினார், மன்னிப்பு கேட்டார், மீண்டும் செய்ய மாட்டார் - எனவே மரண தண்டனைக்கு பதில் சிறை தண்டனையே போதும்" என்று வாதிடுவது.

பகிரங்கமாக "அனோஜனை விடுதலை செய்யுங்கள்" என்று கத்தாமல்,

• "அவர் மனந்திரும்பிவிட்டார், இஸ்லாத்தை மதிக்கிறார்"

• "இஸ்லாத்தில் மன்னிப்பு தான் பெரிய பண்பு"

• "இலங்கை - சவூதி நட்புக்காக கருணை காட்டுங்கள்"

என்று இஸ்லாமிய அடிப்படையிலேயே மன்னிப்பு கேட்கிறார்கள். 

பைசர் முஸ்தபா வைக்கும்  கோரிக்கை - "சவூதி சட்டத்தை மதிக்கிறோம், ஆனால் கருணை காட்டுங்கள்" என்று.

இது  நல்ல நகர்வு சட்டம் பேசாமல் நல்ல முறையில்  மன்னிப்பு  கோருவது ..சட்டம்  பேசினால்  வெற்றி பெற முடியாது என்பது  இரண்டும் ஜனாதிபதி சட்டதரணிகளுக்கும்  தெரியும் !

அதனால்  குறைந்த சிறை  கிடைக்க அதிக வாய்ப்புள்ளது!

 

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும்

 எரிபொருளுக்கு அரசாங்கம் 100% வரி அறவிட்டு வரும் நிலையில், அதில் 50% வரியை நீக்கினால் கூட தற்போதைய விலையை விடக் குறைந்த விலையில் மக்களுக்கு எரிபொருளை வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:

அரசாங்கம் எரிபொருள் வரியைக் பாதியாகக் குறைக்காமல், 4,100 கோடி ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது. ஆனால், அவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்கியும் அதன் உண்மையான சலுகை மக்களுக்குப் போய் சேரவில்லை," எனக் குற்றம் சாட்டினார்.

வரிச் சுமையைக் குறைப்பதன் மூலம் மட்டுமே மக்களுக்கு நேரடி நிவாரணம் வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


 

3வது அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் விரைகிறது!”

ஆம். 2026 அக்டோபர் 2 நிலவரப்படி, அமெரிக்கா 3வது aircraft carrier strike group-ஐ மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி வருகிறது..

அது USS Theodore Roosevelt தலைமையிலான carrier strike group.

அதனுடன் USS Makin Island amphibious readiness group-மும் செல்கிறது. இந்தப் படைப்பிரிவுகளில் சேர்த்து 7,000-க்கும் மேற்பட்ட sailors + சுமார் 2,000 Marines இருப்பதாக    Washington போஸ்ட்  தெரிவித்துள்ளது.

மேலும், இந்த deployment-ல் சுமார் 9,000–10,000 கூடுதல் அமெரிக்கப் படையினர் வரக்கூடும் என்று Wall Street Journal தெரிவித்துள்ளது. 

• , இந்தப் படைகள் மத்திய கிழக்கில் அக்டோபர் இறுதிக்குள் இருக்கக்கூடும் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். 

• மற்றொரு சமீபத்திய தகவலில், நவம்பர் இறுதிக்குள் மூன்று aircraft carriers ஈரானைச் சுற்றியுள்ள பகுதியில் நிலைநிறுத்தப்படலாம் என்று அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார். 

அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல். இது செப்டம்பர் 27 அன்று San Diego-விலிருந்து புறப்பட்டது; மத்திய கிழக்கு நோக்கிச் செல்கிறது. 

, நவம்பர் இறுதிக்குள் மூன்று aircraft carriers மற்றும் இரண்டு amphibious landing groups ஈரானைச் சுற்றிய பகுதியில் நிலைநிறுத்தப்படலாம். 

இதனால் உலக எண்ணெய் விநியோகத்துக்கு மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப் ஈரானின் சமீபத்திய peace proposal-ஐ நிராகரித்துள்ளார். மேலும் நவம்பர் 3 அமெரிக்க midterm தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான குண்டுவீச்சை மீண்டும் அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளார்.


 

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 60ஆம் பிரிவின் கீழ், பிடியாணையைத் தவிர்த்து வரும் ஒரு நபர் குறித்த இடத்திலும் நேரத்திலும் முன்னிலையாக வேண்டும் எனக் கோரி, குறைந்தபட்சம் 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிமன்றம் எழுத்துப்பூர்வ பிரகடனத்தை வெளியிட முடியும்.

இவ்வாறான பிரகடனம் வெளியிடப்பட்ட பின்னரும் குறித்த நபர் முன்னிலையாக தவறினால், 61 ஆம் பிரிவின் கீழ், அந்நபருக்குச் சொந்தமான அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான கட்டளையை நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.