Showing posts with label சர்வதேசம். Show all posts


 


அனோஜனுக்கான உச்ச நீதிமன்ற மனுவை ஒக்டோபர் 17ம் ஆம் திகதிக்கு முன்னமொ, அல்லது அன்றோ சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அது தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனுவைத் தாக்கல் செய்வதற்கான செலவு சுமார் 6.6 மில்லியன் ரூபாயாக இருக்கும் என்றும், இச்செயல்முறைக்காக ஏற்கனவே சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட சட்ட விவகாரங்களுக்கு அரசு வழக்கமாக நிதியுதவி அளிப்பதில்லை என்றாலும், இது ஒரு சிறப்பு வழக்கு என்பதால் அரசாங்கம் இதில் தலையிட்டுள்ளதென அவர் கூறினார்.

சட்டத்தரணிகள் குழு சிக்கலில்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கான சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்ய அங்கு சென்றிருந்த இலங்கை சட்டத்தரணிகள் குழுவினர் சவூதியின் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் ரியாத்தில் சிக்கியுள்ளதாகஆங்கில ஒரு செய்தி கூறுகிறது.

அதன்படி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி அஸார்ட் நவாவி தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும,  ஜனாதிபதி சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் 

கொண்ட குழுவினர், மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை இறுதி செய்த பின்னர் நேற்று இலங்கை திரும்பவிருந்தனர்.

ஆனால், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு சவூதி விமான நிலையங்கள் உள்ளானதைத் தொடர்ந்து ரியாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதால், இக்குழுவினர் அங்கு தற்போது சிக்கிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை ரியாத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.


#saudiarabia #SriLankaNews #TamilNews #AnojanSivarasa#hmmirror


‎ பல முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்கள் பாரிய அளவு சேதம்

‎ அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

‎அண்மையில் யமெனிலுள்ள சனா விமான நிலையத்தில் ஈரானின்

‎ விமானம் தரை இறங்குவதைத் தடுத்த சவுதி ஆதரவுப் படையினரால் வந்த வினை தான்

‎ இப்போது போராக மாறி உள்ளது  

‎இந்தப் போர் உலகளவிலான எரிபொருள் சிக்கலை மேலும் தீவிரப்படுத்துமென பொருளாதார  ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

‎சவுதி வான்பாதுகாப்புப் படையினர்,

‎ ஹவுதி ப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள, 130 இடங்களை இனங்கண்டு 100 போர் விமானங்களைக் கொண்டு, பெரும் தாக்குதலை நடத்தியுளது சவுதி

‎இந்தத் தாக்குதலில் பொது மக்கள் உட்பட பல ஹவுதி  போராளிகளும் கொல்லப்பட்டதோடு, பல அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

‎இதற்குப் பதிலடியாக சவுதியிலுள்ள விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பொருளாதார மையங்கள், மின்சார உற்பத்தி நிலையங்களென பல முக்கிய இடங்களைத் ஹௌதிப் படைகள் தாக்கியழித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 


இஸ்லாமிய மார்க்க இழிவாக பேசியதால்  போலீசார் கைது செய்து, மேலதிக விசாரணைக்காகப் பொது வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அரபு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

VIP என அழைக்கப்படுபவர், அவருக்குச் சிம் கார்டு பெற்றுக்கொடுத்தவர் அல்லது இந்தச் செயலுக்கு உதவியவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து இதுவரை உறுதியான அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.போலீசார் நடவடிக்கை

இன்ஷா அல்லாஹ்! உண்மை வெளிவரட்டும். சட்டப்படி நீதி நிலைநாட்டப்படட்டும்.

📺 சவூதி செய்தி ஊடகத்தின் அரபு வீடியோவைப் பார்த்து, செய்தியின் உண்மையான பின்னணியை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.

#SaudiArabia #SaudiNews #TamilNews #IslamicNews #SriLankaTamil #hmmirror

 


மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை105 அமெரிக்க டொலர் மட்டத்தை கடந்துள்ளது 

இன்றைய வர்த்தகத்தில் Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு US$104.75 வரை உயர்ந்ததாக Reuters தெரிவித்துள்ளது. WTI கச்சா எண்ணெயும் US$92.28 வரை உயர்ந்தது.

மேலும், அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட வானிலை காரணமாக எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறுகளும் விலை உயர்வுக்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#CrudeOil #OilPrices #GlobalMarkets #EnergyMarket #WorldEconomy #MarketNews

#hmmirror

 

  1. சவூதியில் இரண்டு விமான நிலையங்கள் மீது பயங்கர தாக்குதல்: 3 பேர் 
  2.  36 பேர் காயம்!
  3. ரியாத், அபா விமான6 நிலையங்களை இலக்கு வைத்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் – பொதுமக்கள் உயிரிழப்பு.
  4. பரபரப்பில் சவூதி அரேபியா: விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல்!
  • சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அபா சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தனித்தனியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
  • இந்தத் தாக்குதல் சம்பவங்களில் சிக்கி 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
  • மேலும், 36 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 




மண் சரிவு எச்சரிக்கை 

இந்த எச்சரிக்கை இன்று (07) இரவு 7.00 மணி முதல் நாளை (08) இரவு 7.00 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை, கேகாலை மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு மட்டம் 2 – அவதானமாக இருங்கள் (செம்மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் கேகாலை, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எஹெலியகொடை, அயகம, வெலிகேபொல மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கு மட்டம் 1 – விழிப்புடன் இருங்கள் (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சுமார் 15 கடல் மைல் தொலைவில் 20-க்கும் அண்மையான ஈரான் மற்றும் ஈரான் தொடர்புடைய எண்ணெய் கப்பல்கள் தங்கியிருப்பதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கப்பல்களில் சிலவற்றில் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகள் மற்றும் கடல்சார் கட்டுப்பாடுகள் காரணமாக அவை சிக்கலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட

அதேவேளை, மனிதாபிமான அவசரநிலை ஏற்பட்டால் சர்வதேச கடல்சார் சட்டத்தின் அடிப்படையில் உதவி வழங்க வேண்டிய கடமை இலங்கைக்கு இருப்பதாகவும் ஹேரத் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் தூதுவர் டாக்டர் தயான் ஜயதிலக, அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் குறித்த அச்சத்தை விட மனிதாபிமானப் பொறுப்புகளுக்கு இலங்கை முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

மறுபுறம், பாதுகாப்பு ஆய்வாளர் பேராசிரியர் ரோஹன் குணரத்ன, இலங்கைக்கு அருகிலுள்ள ஈரான் தொடர்புடைய கப்பல்களின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு கோணத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார்.

இதனால் கொழும்புக்கு முன்னால் ஒரு சிக்கலான சமநிலை உருவாகியுள்ளது:

இவற்றுக்கு இடையில் இலங்கை எவ்வாறு முடிவெடுக்கிறது என்பது முக்கியமானதாகியுள்ளது.

முக்கியமாக, “அமெரிக்கா இலங்கையை கட்டுப்படுத்துகிறது” என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்ட அரசாங்க நிலைப்பாடு அல்ல. மாறாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அக்டோபர் 4 அன்று, இலங்கை தனது இறையாண்மை, சுதந்திரம் மற்றும் நடுநிலையை பாதுகாத்தே முடிவெடுப்பதாகவும், மனிதாபிமான தேவை ஏற்பட்டால் தலையிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். �


 மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட போதைப்பொருள் பேரழிவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு அல்லது வீதி ஒழுக்கத்தைப் பேணுதல் ஆகியவையே தற்போது நிலவும் பிரதான மூன்று சவால்கள் என வலியுறுத்தினார். 

ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாத ஒரு நிறுவனம் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என்பதால், பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்கம் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 

அத்துடன், ஆண்டொன்றுக்கு 2,000 முதல் 2,500 வரையிலான அதிகாரிகள் ஓய்வுபெறுவதுடன், விபத்துக்கள் மற்றும் இயற்கை காரணங்களால் மேலும் 250 பேர் வரை உயிரிழப்பதாகவோ அல்லது ஊனமுறுவதாகவோ பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். 

இதன்படி, தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 38,000 முதல் 40,000 வரையிலான அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதுவரை சுமார் 1,500 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் 950 பேர் வரை விரைவில் இணைத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டார். 

அத்துடன், நீண்டகாலமாக நிலவி வந்த பதவி உயர்வு தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் இங்கு சுட்டிக்காட்டினார். 

2019 ஆம் ஆண்டு வரை நிலவிய தாமதங்கள், 4,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதன்பின்னர் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக மேலும் சுமார் 2,000 பேருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

தற்போது நடைபெற்று வரும் தகுதி நேர்முகப் பரீட்சைகள் மற்றும் வரவிருக்கும் போட்டிப் பரீட்சைகள் மூலம் இதுவரை நிலவி வந்த பதவி உயர்வு தொடர்பான பிரச்சினை இந்த வருடத்திற்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். 


இதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் உரிய நேரத்தில் பதவி உயர்வுகளை வழங்கும் நடைமுறை தயாரிக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் மேலும் வலியுறுத்தினார். 


இதேவேளை, சிக்கலான சமூகத்தில் பிரச்சினைகள் மற்றும் குற்றங்களைத் தீர்ப்பதற்கு அதிகாரிகளின் அறிவை இற்றைப்படுத்துவது அவசியமானது என்றும், அதற்காக விசேட பயிற்சி நெறிகள் அமுல்படுத்தப்படும் என்றும் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். 

இதன் மூலம் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதுவரை சுமார் 1,000 பேர் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான ஆங்கில அறிவுடைய எந்தவொரு அதிகாரியும் தனது பதவித் தராதரம் பாராது இந்தியப் புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


சிறையில் இருந்து அழத்து வரப்பட்ட  நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல் தொகுதிகளின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறைச்சாலையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அவர், வியாழக்கிழமை சபையில் உரையாற்றியபோது இந்த விடயத்தை முன்வைத்துள்ளார். தமது கூற்றுப்படி, காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலக்கரியின் பெறுமதி சுமார் ரூ.4.62 பில்லியன் என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 120,000 மெட்ரிக் தொன் என்பது இரண்டு நிலக்கரி கப்பல் தொகுதிகளுக்கு சமமான அளவு எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, இவ்வளவு பாரிய அளவிலான நிலக்கரி பதிவுகளில் எவ்வாறு இல்லாமல் போனது என கேள்வி எழுப்பினார்.

«“இந்த அறிக்கைகளின்படி 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது. இந்த இரண்டு நிலக்கரி கப்பல்களையும் விழுங்கியது யார்?”»

என அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனுடன், மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகள், வரிவிதிப்பு, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு, அரிசி இறக்குமதி, கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் அரசாங்கத்தை அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், தவறான கணக்கொன்றுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் கேள்வி எழுப்பிய அவர், தாம் முன்வைத்த குற்றச்சாட்டுகளுடன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அல்லது அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளனவா?!


 ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின.


இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.


கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து முழுச் சூரிய கிரகணம் தென்பட்டதுடன், ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர் தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.


சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதன் காரணமாக சூரிய கிரகணம் ஏற்படுகிறது.


ஸ்பெயினின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்ட மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நீடித்த முழு இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.


அதேவேளை, சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாசரல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் பகுதிச் சூரிய கிரகணம் தென்பட்டது.


பிரித்தானியாவில் சூரியனின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைத்த நிலையில், பகுதிச் சூரிய கிரகணம் தெளிவாகக் காட்சியளித்தது. லண்டனில் உள்ள பிரபல பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தின் பின்னணியிலும் கிரகணம் காட்சியளித்தது.


மேலும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியின்போதும் ரசிகர்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை ரசித்ததுடன், ஹங்கேரியின் அகாட் பகுதியில் உள்ள அவதானிப்புக் கோபுரத்திலும் வானியல் ஆர்வலர்கள் கிரகணத்தை பார்😭வையிட்டனர்


 ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் தான் காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர்மட்ட அரசியல்வாதிகள் சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக, 'வீட்டுக்காவலில்' வைப்பதற்கான சட்ட நடைமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

இது இத்தகைய உயர் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என குறிப்பிட்டார். இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...



 காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலில், கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 60,737 குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளது.


இதில், 52,095 குழந்தைகள் தங்களின் தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களின் தாயையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,713 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.


இத்துடன், 8,858 உறுப்பினர்களை உள்ளடக்கிய 2,276 குடும்பங்கள் குடிமக்களின் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக, காஸா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 கண்டன அறிக்கை


அட்டாளைச்சேனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவர் ஜனாப் ஹலீம் அவர்களை இடைநிறுத்தியிருக்கும் தீர்மானத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடந்த 22 ஆண்டுகளாக அட்டாளைச்சேனையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவராக இருந்து, பல்வேறு சவால்கள், அரசியல் அழுத்தங்கள் மற்றும் எதிரணிகளின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் ஹலீம் அவர்கள். குறிப்பாக, அப்போது தேசிய காங்கிரஸில் இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கட்சியின் நலனைக் காக்கவும் உறுதியாக செயல்பட்டவர்.

இத்தகைய நீண்டகால சேவையாற்றிய ஒருவரை இடைநிறுத்தியிருப்பது கட்சியின் அடிமட்ட போராளிகளின் மனதை வேதனைக்குள்ளாக்கும் முடிவாகும். மேலும், ஹரீஸ் எம்.பி. அவர்களுக்கு எதிராக செயல்பட்ட குழுவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலேயே நிசாம் காரியப்பர் எம்.பி. அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக நான் கருதுகிறேன்.

தமது சொந்தத் தொகுதியிலேயே மக்களின் ஆணையைப் பெற்று வெற்றிபெற முடியாமல், தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள், கட்சிக்காக 22 ஆண்டுகள் உழைத்த ஒருவரை இவ்வாறு இடைநிறுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் சமால்தீன் உள்ளிட்ட அனைவருக்கும், குறிப்பாக நிசாம் காரியப்பர் எம்.பி. அவர்களுக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கு,

போராளி சுபியான்


 நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையிலான இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 35 காயமடைந்த கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை வெளிப்படுத்தியமை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே இந்த வன்முறைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.


"போரு மூணா" என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட சுரேஷ் என அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரே கைதிகளுக்கிடையிலான இந்த வன்முறை மோதலைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இதற்கிடையில், கைதிகளுக்கிடையிலான மோதலின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் குழுவொன்று சிறைக்கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆண் கைதிகளும் சிறைக் கூரையின் மீது ஏறி தனித்தனியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.


இதனையடுத்து, சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் திரண்டு, உள்ளே இருப்பவர்களின் நிலை குறித்த தகவல்களை வழங்க அதிகாரிகள் தவறிவிட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கைதிகளைப் பார்வையிட உறவினர்களின் குழுவொன்றுக்கு பொலிஸார் அனுமதி வழங்கினர்.


சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மற்றும் சுற்றியுள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) மற்றும் கலவரத் தடுப்புப் பிரிவினரும் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டு, அமைதியை நிலைநாட்டவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இதற்கிடையில், ஆர்ப்பாட்டத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கைதிகள் கட்டிடத்தின் மேல் இருந்தபோது கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்த கைதிகள் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் டிதாடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை ஈரான் முன்வைக்கவில்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்றாக, ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் விதிகள் மிக மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர். 

குறிப்பாக, ஈரானிய மசகு எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத் தடைகளை நீக்குவது தொடர்பான 'பிரிவு 10' (Article 10) முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதில் ஈரான் அதிருப்தியில் உள்ளது.

தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் இறுதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை விட, ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விவகாரங்கள் குறித்து கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடுவதற்கே ஈரான் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Powered by Blogger.