இலங்கை அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸ் அணி, இலங்கை அணியை 16 ஓட்டங்களால் தோற்கடித்தது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று(05) இடம்பெற்ற இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி, 45.5 ஓவர்களில் 248 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
மூன்றாவது போட்டி
இதன் மூலம் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற சம வெற்றியை பெற்றுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இறுதிப்போட்டி, ஜூலை 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.