Showing posts with label தொழில்நுட்பம். Show all posts


 அட்டாளைச்சேனை கடற்கரை விளையாட்டு மைதானம் புனரமைப்பு!"

அட்டாளைச்சேனை கடற்கரையில் அமைந்துள்ள Marksman விளையாட்டுக் கழக வீரர்களின் கோரிக்கைக்கு அமைய, இன்று (11) அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ASM. உவைஸ் அவர்களின் தலைமையில், சபையின் இயந்திர வளங்களைப் பயன்படுத்தி கடற்கரை விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டது.

கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (CCD) அனுமதி மற்றும் மேற்பார்வையின் கீழ் இப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ மு.பிரதி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான பாறுக் நஜித், கௌரவ உறுப்பினர் அஸ்வர் சாலி, CCD உத்தியோகத்தர் IP. கியாத் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றி, விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் ஆதரவளிப்பது எமது சமூகப் பொறுப்பாகும்.


 

க.பொ.த (உயர் தர) பரீட்சை – 2026 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாமல் போன பரீட்சகர்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இணையவழி விண்ணப்பிக்கும் கால அவகாசம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, பரீட்சகர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்தின் ஊடாக 26ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.


மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால், இணையவழிப் பிரிவு மற்றும் பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவு ஆகியவற்றின் தொலைபேசி உதவி சேவைகளை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

X

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இரண்டாவது தடவையும் வங்குரோத்து நிலையை அடைந்தால், அதிலிருந்து மீண்டெழுவது மிகவும் கடினம் என ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்

2029-ல் மீண்டும் ஜனாதிபதியாவார்..

எனவே, அவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படுவதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால், அவர் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தி நாட்டுக்காகச் சிறந்த பலன்களைப் பெற்றுக்கொடுப்பார். மக்களிடம் உண்மைகளைக் கூறிக்கொண்டே ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டும்.

தம்மால் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்பதைச் செயலில் காட்டிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே ஆவார். அவரது பொருளாதார மீட்சித் திட்டங்களைச் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள்கூடப் பாராட்டியுள்ளனர்.

நாட்டை மீட்டெடுக்கும் இந்த முக்கிய பயணத்தில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் இணைந்துகொள்வார். தேவைப்பட்டால் அவரைப் பலவந்தமாகவேனும் நாம் மீண்டும் அழைத்து வருவோம். பொருளாதார நெருக்கடியை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு கட்டத்தில், நாட்டில் மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும் 

கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த கிரீஸ் நாட்டில் குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இலங்கையிலும் தற்போது புதியதொரு அரசியல் கலாசாரமே நிலவுகின்றது.

எனவே, 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார்.  



 


 



வங்கி கடனுக்கு (loan )பிணைகாறராக நிற்கும் (  Guarantor) அரச ஊழியர்,  தனி நபர்களின் கவனத்திற்கு. ...

பிணை நிற்பவர்களுக்குள்ள சட்டப் பொறுப்புகள் குறித்து 2026/5/26 அன்று உச்சநீதிமன்றம் (supreme court) வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பு முனை தீர்ப்பு ஒன்றை அண்மையில் வழங்கியுள்ளது. 

நண்பர் அல்லது உறவினர் ஒருவர் கேட்டதால், பலர் எந்த ஆவணத்தையும் முறையாக வாசிக்காமல் வங்கிக் கடன்களுக்கு பிணைகா றராக (Guarantor ) கையொப்பமிடுகின்றனர். 

பெற்ற கடனை அறவிட  நிதி நிறுவனங்கள் ஆரம்பத்தில் பிரதான கடனாளியை முன்னிறுத்தி தியே வழக்கு தாக்கல் செய்து வந்தன.

அதாவது, கடனாலி பணத்தை செலுத்த தவறினாலும், வங்கி நேரடியாக  பிணை காரரிடம் ( Gurantor) செல்ல முடியாது.

முதலில் பிரதான கடனாளிக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுத்து, அவரிடமிருந்து  கடனை வசூலிக்க அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும். அதன் பின்னரே மீதமுள்ள தொகைக்காக பிணை காரரிடம் ( Guarantor)  செல்ல முடியும்.

இனி நிலைமை. .....

பிரதான கடனாளிக்கு எதிராக வழக்கு தொடராமல் பிணைகாரருக்கு ( Guarantor ) மட்டும் எதிராகவும் நேரடியாக வழக்கு தொடர முடியும் 

சட்டத்தை அறியாமை ஒரு பாதுகாப்பல்ல. 

இனிமேல் எந்த ஆவணத்திற்கும், குறிப்பாக நிதி (loan )பொறுப்புகள் ஏற்படும் ஆவணங்களுக்கு பிணைகாரராக ( Guarantor ) கையெழுத்திடும் முன் (கடன் நிபந்தனைகளை  வாசித்து ) இருமுறைக்கு பலமுறை சிந்தியுங்கள்!


புரிதல். ..

 எம்பிக்கள் கட்சி மாறினால், அவர்களின் பதவியை பறிக்கும் சட்டத்தைக் கொண்டு வர அரசாங்கம் முடிவு!




 ஆறு வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுங்க அதிகாரிகள் கூட்டணி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 


குறித்த அதிகாரிகளுக்கு பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும் முறையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூட்டணி தெரிவித்துள்ளது. 


எனவே, இன்று (24) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் சுங்க அதிகாரிகள் கறுப்பு நிற ஆடை அணிந்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


இருப்பினும் 26ஆம் திகதி நிதி அமைச்சகம் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு உட்பட பல தரப்பினருடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கலந்துரையாடலின் இறுதியில் சுங்க தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதிகள் அடுத்த வெள்ளிக்கிழமை கூடி தங்கள் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து மேலும் முடிவுகளை எடுப்பார்கள். 


 முந்தல் - நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். 


படுகாயமடைந்தவர்களை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 




. நோயாளர் காவு வண்டி மின் கம்பத்தில் மோதியதில் ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். 

கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த நிந்நவூர் ஆதார மருத்துவமனைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியே பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாரியளவிலான மின்கம்பத்தில் மோதியுள்ளது.

   


நாடாளுமன்ற உறுப்பினர்களின் நீண்டகால ஓய்வூதிய சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "2025 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற ஓய்வூதிய (ரத்து செய்தல்) சட்டமூலம்" தற்போது வர்த்தமானியில் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் "வளரும் தேசம் - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தின் கீழ் வழங்கப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.

1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டம் இதன் மூலம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாழ்நாள் ஓய்வூதிய நடைமுறை இனி நடைமுறையில் இருக்காது.

 2024 ஜனவரி நிலவரப்படி, 330 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களின் 182 துணைவிகளும் (மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர்) பெற்று வரும் ஓய்வூதிய உரிமைகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும்.

எனினும்  ஏற்கனவே வழங்கப்பட்ட ஓய்வூதியங்கள் மீளப் பெறப்பட மாட்டாது. எனினும், சட்டம் அமலுக்கு வந்தவுடன் எதிர்கால கொடுப்பனவுகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்படும்.

கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, நவம்பர் 2025 இல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தடுக்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே கமெண்ட் செய்யுங்கள்! 


 


• பெற்றோல் (92 ஒக்டேன்) - விலை மாற்றம் இல்லை

• பெற்றோல் (95 ஒக்டேன்) - 05/- அதிகரிப்பு (புதிய விலை - 340/-)

• டீசல் - 2/- அதிகரிப்பு (புதிய விலை - 279/-)

• சுப்பர் டீசல் - 05/- அதிகரிப்பு (புதிய விலை - 323/-

• மண்ணெண்ணை - 2/- அதிகரிப்பு (புதிய விலை - 182/-


 ​திருகோணமலை, அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


திருகோணமலை 6ஆம் கட்டைப் பகுதியில் நடமாடும் பஞ்சர் ஒட்டும் (Mobile Puncture Service) சேவையை வழங்கி வருபவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 


விபத்தின்போது முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்குள்ளாகினர்.


காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


விபத்து இடம்பெற்றதற்கான காரணம் குறித்து திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீனக்குடா நிருபர் கியாஸ் ஷாபி

 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் 180 கோடி ரூபா நட்டஈட்டுத் தொகையை நீதிமன்றில் செலுத்தியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும் தாம் அவ்வாறான எந்வொரு நட்டஈட்டுத் தொகையையும் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தனது முகநூல் கணக்கில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

கிரேக்க பிணை முறி முதலீட்டினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்ய அஜித் நிவாட் கப்ரால் நட்டஈடு செலுத்தியதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் முற்றுமுழுதாக பொய்த் தகவல் எனவும் அவ்வாறு எந்தவொரு தொகையையும் தாம் செலுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறான நட்டஈடு செலுத்த வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என தமது சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு தெளிவாக விளக்கியுள்ளதாகவும் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கிரேக்க பிணை முறி முதலீட்டில் அரசாங்கத்திற்கு பெருந்தொகை நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கிலிருந்து தம்மை குற்றமற்றவர் என தீர்மானித்து நீதிமன்றம் விடுதலை செய்தது என கப்ரால் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார். 

எனினும் நிபந்தனை அடிப்படையிலேயே வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


 ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், தனது நாடு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் “முழுமையான போரில்” ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 


இந்த மோதல் 1980களில் இடம்பெற்ற ஈரான்-ஈராக் போரை விட மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

 


இந்த போரினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


மேற்கத்தேய சக்திகள் ஈரானை ஒவ்வொரு அம்சத்திலும் முற்றுகையிட்டு, பொருளாதார, கலாசார, அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 


இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க சில நாட்களே உள்ள நிலையில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

 


இந்த சந்திப்பில் ஈரான் தொடர்பான விடயங்கள் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுற்றிவளைப்பு நடவடிக்கை

கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சுற்றாடல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் நாடு முழுவதும் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

 போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு


‘கிராம  சேவகர்கள்  தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவிக்கிறது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-12-17


 இது கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வீடு.

இது அந்த வீட்டின் இரண்டாம் மாடி.

மேல்மாடி கூரையில் இருக்கும் அந்தச் சிறிய துளை தெரியும்தானே? 

அந்த கூரையின் உயரம் வரை வந்த நீருடன் போராடிக்கொண்டே,

15 வயதான ஒரு பெண் குழந்தை

தன் தலையால் அடித்து அந்தத் துளையை உருவாக்கி

அதன் வழியாக வெளியே வந்து

தன் உயிரை காப்பாற்றிக்கொண்டாள். 

அந்தத் துளையின் வழியாக வெளியே வந்தவுடன்

அவள் தன் உயிரை காப்பாற்றிக்கொண்டாள்… 

இந்தச் சூழ்நிலை எவ்வளவு தீவிரமானது என்பதற்கு,

அந்த நேரத்தில் அவளைத் தவிர

அந்த வீட்டுக்குள் இன்னும் 12 பேர் இருந்தனர் —

அவர்களில்

4 பேர் கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் 

மற்ற 8 பேர் உயிர் தப்பினார்கள்…

அவர்கள் அனைவரும் அவளுடைய சொந்த குடும்பத்தினரே.

தனக்கும் இன்னும் சில நிமிடங்களில்

அதே ஆபத்து நேரிடும் என்ற

மரண பயம் அவளுக்குள் ஏற்பட்டது.

மெல்ல மெல்ல உயர்ந்துகொண்டிருந்த நீருடன்,

மரணத்தை எதிர்கொண்டு

தன் தலையால் கூரையை உடைத்து

உயிரை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது… 

நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த துயரக் கதைகள்

இன்று உண்மையில் அனுபவிக்கும் மனிதர்கள்

இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்…

அந்த தருணத்தில்

அங்கு இருந்த சூழ்நிலை

எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும்? 


Copied from Ishan Menaka


 .

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கட்சியின் இளம் மட்டத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடந்த போதே ரணில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியை அரசாங்கம் உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டத்தினரிடம் கூறிய முன்னாள் ஜனாதிபதி, ஜனவரி முதல் அதற்காக பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Powered by Blogger.