Showing posts with label சினிமா. Show all posts

 


மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை105 அமெரிக்க டொலர் மட்டத்தை கடந்துள்ளது 

இன்றைய வர்த்தகத்தில் Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு US$104.75 வரை உயர்ந்ததாக Reuters தெரிவித்துள்ளது. WTI கச்சா எண்ணெயும் US$92.28 வரை உயர்ந்தது.

மேலும், அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட வானிலை காரணமாக எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறுகளும் விலை உயர்வுக்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#CrudeOil #OilPrices #GlobalMarkets #EnergyMarket #WorldEconomy #MarketNews

#hmmirror

 

  1. சவூதியில் இரண்டு விமான நிலையங்கள் மீது பயங்கர தாக்குதல்: 3 பேர் 
  2.  36 பேர் காயம்!
  3. ரியாத், அபா விமான6 நிலையங்களை இலக்கு வைத்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் – பொதுமக்கள் உயிரிழப்பு.
  4. பரபரப்பில் சவூதி அரேபியா: விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல்!
  • சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அபா சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தனித்தனியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
  • இந்தத் தாக்குதல் சம்பவங்களில் சிக்கி 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
  • மேலும், 36 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின.


இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.


கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து முழுச் சூரிய கிரகணம் தென்பட்டதுடன், ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர் தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.


சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதன் காரணமாக சூரிய கிரகணம் ஏற்படுகிறது.


ஸ்பெயினின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்ட மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நீடித்த முழு இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.


அதேவேளை, சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாசரல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் பகுதிச் சூரிய கிரகணம் தென்பட்டது.


பிரித்தானியாவில் சூரியனின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைத்த நிலையில், பகுதிச் சூரிய கிரகணம் தெளிவாகக் காட்சியளித்தது. லண்டனில் உள்ள பிரபல பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தின் பின்னணியிலும் கிரகணம் காட்சியளித்தது.


மேலும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியின்போதும் ரசிகர்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை ரசித்ததுடன், ஹங்கேரியின் அகாட் பகுதியில் உள்ள அவதானிப்புக் கோபுரத்திலும் வானியல் ஆர்வலர்கள் கிரகணத்தை பார்😭வையிட்டனர்


 ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் தான் காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர்மட்ட அரசியல்வாதிகள் சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக, 'வீட்டுக்காவலில்' வைப்பதற்கான சட்ட நடைமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

இது இத்தகைய உயர் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என குறிப்பிட்டார். இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...



 காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலில், கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 60,737 குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளது.


இதில், 52,095 குழந்தைகள் தங்களின் தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களின் தாயையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,713 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.


இத்துடன், 8,858 உறுப்பினர்களை உள்ளடக்கிய 2,276 குடும்பங்கள் குடிமக்களின் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக, காஸா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

 


 



​மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-15E Strike Eagle போர் விமானம் இன்று குவைத்தில் விழுந்து நொறுங்கியது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

​இன்று மதியம் குவைத்தின் அல் ஜஹ்ரா (Al Jahra) பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்த அந்த ராட்சத விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தீப்பிழம்பாக வானிலிருந்து கீழே விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர்.

விமானம் தரையில் மோதுவதற்கு சில நொடிகள் முன்பே, அதிலிருந்த இரண்டு விமானிகளும் Ejection Seat மூலம் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினர். அவர்கள் தற்போது காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மர்மம் நீடிப்பு - இது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது ஏவுகணைத் தாக்குதலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரானின் அதிரடி கிளெய்ம் - "நாங்கள் தான் வீழ்த்தினோம்" என ஈரான் தரப்பு ஒரு பக்கம் கூற, அமெரிக்காவோ "விசாரணை நடக்கிறது" என மௌனம் காக்கிறது.

​அமெரிக்காவின் மிக வலிமையான போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் F-15 விழுந்துள்ள விபத்து, சர்வதேச அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

​"வானில் தெரிந்த நெருப்புப் பந்து.. அடுத்த சில நொடிகளில் பலத்த சத்தம்!" - நேரில் பார்த்த குவைத் மக்களின் அதிர்ச்சிப் பேட்டி இப்போது வைரலாகிறது.

 


 

 


வெனிசுலாவின் 50 மில்லியன் எண்ணெய் பாரல்களை நாள்தோறும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு டொலர் கூட வெனிசுலாவுக்குக் கொடுக்காமல் கொள்ளையடிப்பதை அவரே அறிவித்ததை உலகம் பார்த்தது. 

இந் நிலையில் வெனிசுலாவிடமிருந்து  எண்ணெய் வாங்கும் ரஷ்யா அதற்கான விலையை வெனிசுலாவுக்குக் கொடுத்து அதனை நெருக்கடியிலிருந்து காக்க முன்வந்தது. இதனைப் பொறுக்காத அமெரிக்கா வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளின்  சரக்குக் கப்பலைத் தடுப்போம் என்று அச்சுறுத்தியது. 

இதனை எதிர்கொள்ள அணு ஆற்றலால் இயங்கும் இராணுவ நீர்முழ்கிக் கப்பலும், சக்திவாய்ந்த ரஷ்யாவின் கப்பற் படையும் தற்போது வெனிசுலாவுக்கு விரைகின்றது.  அமெரிக்கா தாக்கினால் திருப்பித் தாக்கவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் கடற்படைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2571ஆக உயர்ந்துள்ளது.


உயிரிழந்தவர்களில் 2403 பேர் போராட்டக்காரர்கள் என்றும் 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


போராட்டக்காரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 


ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போராட்டக்காரர்களைக் கொலை செய்தால், தான் இராணுவ ரீதியாக தலையிடப் போவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த புதிய வரிகளை விதித்துள்ளார்.

தனது Truth Social சமூக வலைத்தளக் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


 ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social சமூக வலைத்தளக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.


இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


ஈரான் போராட்டக்காரர்களைக் கொலை செய்தால், தான் இராணுவ ரீதியாக தலையிடப் போவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த புதிய வரிகளை விதித்துள்ளார். 

Powered by Blogger.