குறுகிய மணிநேரங்களில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு

 


கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 வரை கடவுச்சீட்டுகளும் வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1000 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாவும் வழக்கமான சேவைக்கு 10,000 ரூபாவும் அறவிடப்படுகிறது. கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், கால தாமதங்கள் ஏற்படக்கூடும்.

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது

எனவே, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் கவனம் செலுத்தி, அவை தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

16 வயதில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பல ஆண்டுகளில் பின் உடல் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதனை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும்.

மேலும் ஒரு நாள் சேவை மற்றும் வழக்கமான சேவையின் கீழ் ஒரு நாளைக்கு சராசரியாக 4000 முதல் 5000 வரை அடையாள அட்டைகள் வழங்கப்படுவதமாக என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்