அனோஜனுக்கான உச்ச நீதிமன்ற மனுவை ஒக்டோபர் 17ம் ஆம் திகதிக்கு முன்னமொ, அல்லது அன்றோ சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அது தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவைத் தாக்கல் செய்வதற்கான செலவு சுமார் 6.6 மில்லியன் ரூபாயாக இருக்கும் என்றும், இச்செயல்முறைக்காக ஏற்கனவே சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சட்ட விவகாரங்களுக்கு அரசு வழக்கமாக நிதியுதவி அளிப்பதில்லை என்றாலும், இது ஒரு சிறப்பு வழக்கு என்பதால் அரசாங்கம் இதில் தலையிட்டுள்ளதென அவர் கூறினார்.
சட்டத்தரணிகள் குழு சிக்கலில்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கான சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்ய அங்கு சென்றிருந்த இலங்கை சட்டத்தரணிகள் குழுவினர் சவூதியின் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் ரியாத்தில் சிக்கியுள்ளதாகஆங்கில ஒரு செய்தி கூறுகிறது.
அதன்படி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி அஸார்ட் நவாவி தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி ஹபீல் பாரிஸ்
கொண்ட குழுவினர், மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை இறுதி செய்த பின்னர் நேற்று இலங்கை திரும்பவிருந்தனர்.
ஆனால், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு சவூதி விமான நிலையங்கள் உள்ளானதைத் தொடர்ந்து ரியாத் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதால், இக்குழுவினர் அங்கு தற்போது சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை ரியாத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
#saudiarabia #SriLankaNews #TamilNews #AnojanSivarasa#hmmirror
