லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்துக்கு 2027ஆம் ஆண்டுக்கான திரவ பெற்றோலிய வாயுவை (LPG) விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை சவூதி அரம்கோ நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் 12 மாத காலத்திற்கு 420,000 மெற்றிக் தொன் (±20%) எரிவாயுவை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது. இதன் குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட அளவு 336,000 மெற்றிக் தொன்னாகும்.
குறித்த விநியோகத்திற்காக சர்வதேச போட்டி விலைமுறையின் கீழ் கோரப்பட்ட விலைமனுக்களில் நான்கு விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, காப்புறுதி மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் உள்ளடங்கலாக, ஒரு மெற்றிக் தொன்னுக்கு 133.93 அமெரிக்க டொலர் என்ற ஒப்பந்த விலையில் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
