அடுத்த ஐஜிபி வீரசூரிய
பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட, பதில் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பிரியந்த வீரசூரியவின் பெயருக்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.
நவம்பர் 2023 முதல் பதில் பொறுப்பில் வீரசூரிய பணியாற்றி வருகிறார். இவர், இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபராவார்.