கொழும்பு, மிரிஹான பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை ஏமாற்றிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் மூலம் அறிமுகமாக 35 வயதான நபரும் 21 வயது யுவதியும் காதல் தொடர்பில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என அறிந்த யுவதி, அந்த உறவில் இருந்து விலகியமையினால் கோபம் அடைந்த குடும்பஸ்தர் இந்த செயலை செய்துள்ளார்