திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸும், உள் வீதியிலிருந்து ஏ9 வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த பேரின்பநாயகி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டப் பின்னரை், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.