கடுவெல பிரதேசத்தில் நேற்றைய தினம் (18) கைப்பற்றப்பட்டவை போலி ஆயுதங்கள் என்று பொலிசார் அறிவித்துள்ளனர்.
கடுவெல, அதுருகிரிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் நேற்று டி-56 ரக துப்பாக்கிகள் மூன்று, பிரவுணிங் ரக கைத்துப்பாக்கிகள் ஐந்து, டி-56 துப்பாக்கியின் மெகசின் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டிருந்தது.
பொலிஸார் விசாரணை
குறித்த ஆயுதங்கள் பிரயாணப் பை ஒன்றில் இடப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டிருந்த நிலையில் நவகமுவ பொலிசாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவை போலியான ஆயுதங்கள் என்பதாக பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
ஆயினும் டி-56 துப்பாக்கியின் மெகசின் போலியானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.