அநுர தலைமையிலான ஆட்சி! எதிரணிகளை அழைத்த உதய கம்மன்பில


 அநுர தலைமையிலான இந்த ஆட்சியை மாற்றுவதற்குரிய தமது கடப்பாட்டை நிறைவேற்ற எதிரணிகள் முன்வரவேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை பெற்றுக்கொள்ள முடியும்.

பொருளாதார நெருக்கடி 

2028 இல் இந்நாடு கடன் செலுத்தும் நாடாக மாறவேண்டுமெனில் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 5 ஆக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. 2024 இல் நாம் இதனை செய்தோம்.

எனினும், தற்போது பொருளாதார வளச்சி வீதமானது 3.5 ஆகவும், அடுத்த வருடம் 3.1. ஆகவும் இருக்குமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைய முடியாமல் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். இந்நிலையில் எதிரணிகள் ஒன்றுபட்டால் அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிரணிகள் ஓரணியில் திரண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அடுத்த ஜனாதிபதி யார் என்ற விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலை வென்றெடுக்க ஒன்றுபட வேண்டும்.

ஜனாதிபதி யாரென்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். இந்த ஆட்சியைக் கவிழ்க்கும் பொறுப்பை எதிரணிகள் ஏற்க வேண்டும். எதிரணியை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்