ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) அதிகாலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
இதனை தொடர்ந்து 13 அடி உயர சுனாமி அலைகள் கம்சட்கா தீபகற்பத்தை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்நிலையில் ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளதுடன்,
அந்நாட்டில் 1 மீற்றர் வரை அலைகள் உயரக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் ஹவாய் தீவுகள் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.