நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கம் ஏற்படும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது