அம்பாரை மாவட்டத்தில் உள்ள அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்களில் கடமையாற்றும் ஊடகவியாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் சுயாதீன மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களின் நலன் கருதி “திகாமடுல்ல மீடியா போரம்” எனும் அமைப்பு உதயமாகியுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
அத்துடன் உத்தியோகபூர்வமான நிர்வாக சபையும் சபையோரின் ஏகோபித்த பிரகாரம் அங்கீகரிக்கப்பட்டது.
தலைவராக சிரேஷ்ட. ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ்,
பொதுச் செயலாளராக எஸ்.சினீஸ் கான் ஆகியோர் செய்யப்பட்டதுடன் ஏனைய நிருவாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.