அக்கரைப்பற்றில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு சிறுவன் பலி


 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கண்ணகி கிராமத்தை சேர்ந்த16 வயதுடைய பெ.ஜீரோசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த சிறுவன் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்பரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இன்றைய தினமும் சில ஏக்கர் வயல்நிலங்களை உழுதுவிட்டு நண்பரின் உழவு இயந்திரத்தில் ஏறி அருகில் இருந்தபோது  தவறி வீழ்ந்து வயலை இரட்டிப்பாக்கும் கலப்பைக்குள் அகப்பட்டு நசுங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்