குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை ஒக்டோபர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.
ஈஸ்டர் தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த மனுவை ஒக்டோபர் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.