காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் 35வது நூலான "அகர முதல குறள்கள் 1000" நூல்வெளியீடு.

 



(றாசிக் நபாயிஸ்,

ஏ.எல்.எம். ஷினாஸ், 

முஜீப் சத்தார்)

மருதமுனையின் மூத்த இலக்கியவான் மர்ஹும்

புலவர்மணி ஆ.மு ஷரிபுத்தீனின் இரண்டாவது மகனான காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் 35வது நூலான "அகர முதல 

குறள்கள் 1000" எனும் நூல் வெளியீடும் இலக்கிய அரங்கமும்

மருதமுனை

அல்-மனார் மத்திய கல்லூரியின் சுபைர் இப்றாகீம் மாநாட்டு மண்டபத்தில் றிஸ்வி மஹ்மூத் ஷரிபுத்தீனின் ஒருங்கிணைப்பில்

முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளரும் சட்டத்தரணியும் கவிஞருமான

எம்.எஸ்.எம். ஜமீலின் தலைமையில் நேற்று (04) இடம் பெற்றது.


இந்நிகழ்வின்

தொடக்கவுரை பொறியிலாளரும் கவிஞருமான

நியாஸ் ஏ.சமத் நிகழ்த்த

"ஜின்னாஹ்வின் கவிப்புலம்" பற்றிய

வெளியீட்டுரை 

பாவேந்தல் பாலமுனை பாரூக்

நிகழ்த்த, "கம்பன் வழியில் காப்பியக்கோ" எனும் சிறப்புரையை 

மனிதவள ஆலோசகரும் உளவியல் ஆய்வாளருமான

ரக்ஷானா ஷரீபுத்தீன் நிகழ்த்த, "உரை நடையில் ஜின்னாஹ்" எனும் 

நூலாய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளரும் எழுத்தாளருமான

கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் நிகழ்த்தினார்.

இந்நூல் வெளியீட்டின் போது

"அருணோதய வாசல்"

எனும் தலைப்பில் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தரும்

சிரேஷ்ட கவிஞருமான மருதமுனை ஹஸன் அவர்களின் தலைமையில்

கவியரங்கம் ஒன்றும் இடம்பெற்றது.

இக்கவியரங்கில் மூத்த 

கவிஞர்களான

அக்கரைப்பக்கியன், எம்.ஏ.ஏ.கரீம் மற்றும் மாஜிதா தவ்பீக் ஆகியோர் பங்கு பற்றி தமது கவிதைகளை அரங்கேற்றினர்.

இந்நிகழ்வுக்கு இலக்கிய அதிதிகள், கவிஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜின்னா

ஷரீபுத்தீனின் குடும்ப உறவுகள் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வின்

நிகழ்ச்சித் தொகுப்பை

திக்ரா ஹாஜர் ஷரீபுத்தீன் தொகுப்பு வழங்கினார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்