அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை - ஈரான் திட்டவட்ட அறிவிப்பு



அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை ஈரான் முன்வைக்கவில்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்றாக, ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் விதிகள் மிக மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர். 

குறிப்பாக, ஈரானிய மசகு எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத் தடைகளை நீக்குவது தொடர்பான 'பிரிவு 10' (Article 10) முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதில் ஈரான் அதிருப்தியில் உள்ளது.

தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் இறுதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை விட, ஹோர்முஸ் நீரிணை தொடர்பான விவகாரங்கள் குறித்து கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடுவதற்கே ஈரான் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்