க.பொ.த (உயர் தர) பரீட்சை – 2026 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாமல் போன பரீட்சகர்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இணையவழி விண்ணப்பிக்கும் கால அவகாசம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சகர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்தின் ஊடாக 26ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால், இணையவழிப் பிரிவு மற்றும் பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவு ஆகியவற்றின் தொலைபேசி உதவி சேவைகளை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
