14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை


 இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அதிஅபாயப் பிரிவுகளில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிஅபாயப் பட்டியல்

சமீபத்திய தரவுகளின்படி, மேல் மாகாணமே டெங்கு நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவிலான அதிஅபாயக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாகாண வாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:-

1. கொழும்பு மாவட்டம் - கொழும்பு மாநகர சபை எல்லை, மகரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொட உயன மற்றும் கோட்டடுவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2. கம்பஹா மாவட்டம் - அத்தனகல்ல, சீதுவ, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர ஆகிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

3. களுத்துறை மாவட்டம் - பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வத்தேகம (வத்துவ), களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகள் இந்த அதிஅபாயப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

ஏனைய மாவட்டங்கள் - மேல் மாகாணத்துக்கு மேலதிகமாகக் காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அதிஅபாயக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்