NPP உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் அங்கீகரிப்பு





(ஏ.எல்.றமீஸ்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று காலை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் கூடியது.

இதன் போது 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.

உறுப்பினர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள்.ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் உட்பட 13 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்

தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்