ஜனாதிபதியுடன் தமிழரசுகட்சியினர் இன்று முக்கிய சந்திப்பு! சாணக்கியன் வெளியிட்ட தகவல்

 


இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று(19) புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு இன்று(19) மதியம் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சாணக்கியன் தகவல்

இந்தச் சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி இறுதியாகக் கூட்டிய மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சந்திப்புக்கான நேரம் கோரி ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்