அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 20 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

