நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி எம்.ஐ.எம்.இர்பான் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்து வந்த அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாகவுள்ள தவிசாளர் பதவிக்கு பிரதித் தவிசாளராக கடமையாற்றி வந்துள்ள சட்டத்தரணி எம் ஐ. இர்பான் பதில் தவிசாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.
பதில் தவிசாளராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி எம்.ஐ.இர்பான் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.றஸீன் .பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


