துபாய் போதைப்பொருள் கடத்தல்காரரின் பினாமி அம்பாறையில் கைது

 


நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமாக விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று (09) அம்பாறை தலைமையக பொலிஸ் பிரதான பரிசோதகர் அசேல கே ஹேரத்தின் மேற்பார்வையின் கீழ்  அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடாத்தப்பட்ட  சோதனை நடவடிக்கையில் இச்சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிருந்து இயங்கும் போதைப்பொருள் கடத்தல்காரரின் தலைமையில் குறித்த கைதான சந்தேக நபர் செயற்பட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

தற்போது கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் கிழக்குப்பிராந்தியத்திற்குப்பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலில் அம்பாறை பிரிவுக்குப்பொறுப்பான பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் வழிகாட்டுதலில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்