மித்தெனியாவிற்கு வந்த ஐஸ் தயாரிக்கும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட முந்நூறு கொள்கலன்களில் உள்ளதா என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல, சிறு பிள்ளை போல நடந்து கொண்டதற்கு ராஜபக்ச வருத்தம் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கொள்கலன்கள் குறித்து பொலிஸாருக்கு முன்பே தகவல் கிடைத்ததா என்பதையும் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.