மீண்டும் பாராளுமன்றத்திற்கு ரணில் விக்கிரமசிங்க?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்ற போதே இதனைத் தெரிவித்தார்
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஏதேனும் ஏற்பாடு உள்ளதா?” என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட போதே இதற்கு பதிலளித்த ருவான் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
"அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அத்தகைய ஏற்பாடு எதுவும் இதுவரை இல்லை எனவும். சரியான நேரம் வரும்போது அவர் பாராளுமன்றத்திற்குச் செல்வார். ஆனால் தற்போது அத்தகைய தீர்மானம் இல்லை. அத்தகைய ஏற்பாடும் எதுவும் இல்லை," என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கூறியுள்ளார்