பிரேக் இல்லாத தொடருந்து பள்ளத்தில் போவது போல் நாடு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது பள்ளத்தில் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் சர்வஜன அதிகாரம் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“இன்று அரசாங்கம் பாதுகாப்பு தொடர்பில் கணிப்பீடு நடத்துகிறது.
வாக்குறுதிகள்
உயர் அரசியல்வாதிகள் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர். மக்கள் அதிகமாக வாக்களித்து இந்த அரசாங்கத்தை அமைத்துக் கொண்டனர்.
ஆனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த 40 வருடங்களாக இந்த நாட்டை வீணாக்கியவர்கள் ஜே.வி.பியினரும் விடுதலைப் புலிகளும் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார்.