புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று காலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியமையையடுத்து புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவரை அவதூறுக்குள்ளாக்கியதாக காணொளிகள் வெளியாகிய சம்பவத்தையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையொன்றின் அங்கமொன்றாகவே கைது இடம்பெற்றதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.