எதிர்கட்சித் தலைவர் Sajith Premadasa நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது, நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது


இது தொடர்பில் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தின் #ஊழியர்கள் குழுவொன்று சஜித் பிரேமதாசாவின் மனைவியான  #ஜலனி பிரேமதாசவின் #தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள்  வழங்கிய தகவலில்  தெரிவித்துள்ளனர்

19 #அரசு_ஊழியர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த அரச ஊழியர்கள் தங்கள் பணியுடன் #தொடர்பில்லாத வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்

அதாவது, சஜித் பிரேமதாசாவின் #மனைவியின் பணி, அவரது #அரசியல்_பணி மற்றும் அவரின் #தனிப்பட்ட_பணி ஆகியவற்றை செய்வதற்கு குறித்த ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்