பராமரிப்பாளர்களை பராமரிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

 





பராமரிப்பாளர்களை பராமரிப்பதற்கான பயிற்சிப்  பட்டறை

பராமரிப்பாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உளத்தூய்மையுடன் சேவையாற்றக்கூடிய பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களை உருவாக்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றினை சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் முன்னெடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் குடும்ப சகாதார பணியகத்தின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைகளுக்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் கல்முனை பிராந்தியத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களில் பணியாற்றுகின்ற மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ தாதியர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான 5 நாள் பயிற்சிப்பட்டறை ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

குடும்ப சுகாதார பணியத்தின் பிரதிநிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையில் கல்முனை, அம்பாரை மற்றும் திருகோணமலை ஆகிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளின் தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.எச்.றிஸ்பின், டொக்டர் தமரா மற்றும் டொக்டர் ஏ.எச்.சமீம் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரையாற்றியதுடன் பயிற்சிகளையும் வழங்கினர்.

குடும்ப சுகாதார பணியகம் இந்த வேலைத்திட்டத்தினை புதிதாக அறிமுகம் செய்து இலங்கையில் உள்ள சகல மாவட்டங்களிலும் குறித்த பயிற்சிப்பட்டறையினை நடாத்தி வருகின்றது. இதனூடாக உளத்தூய்மையுடன் பராமரிப்புக்களை மேற்கொள்கின்ற குடும்ப தாதிய உத்தியோகத்தர்களும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் குறித்த வேலைத்திட்டத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களும் 2 வயது குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களும் சிறந்த சேவையினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களும் ஏற்படும்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்