மில்கோ நிறுவனத்திற்காக படல்கமவில் டென்மார்க் நாட்டு கடன் திட்டத்தில் பசில் ராஜபக்ச 4 இலட்சம் லீட்டர் கொள்ளளவுடனான தொழிற்சாலை ஒன்றை நிர்மாணித்துள்ளார் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 




டென்மார்க் நாட்டு கடன் திட்டத்தில் பசில் ராஜபக்ச 4 இலட்சம் லீட்டர் கொள்ளளவுடனான தொழிற்சாலை மோசடி : சபையில் பகிரங்கமாக கூறிய கௌரவ ஜனாதிபதிஅநுர

மில்கோ நிறுவனத்திற்காக படல்கமவில் டென்மார்க் நாட்டு கடன் திட்டத்தில் பசில் ராஜபக்ச 4 இலட்சம் லீட்டர் கொள்ளளவுடனான தொழிற்சாலை ஒன்றை நிர்மாணித்துள்ளார் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

மேலும், அதன் வேலைகள் முடிக்கப்படவில்லை, இது தொடர்பான கணக்காய்வு ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

படல்கம மில்கோ

இப்போது மில்கோ நிறுவனத்திற்கு இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் லீட்டர் பாலே கிடைக்கிறது. அதில் திகண, பொலன்னறுவை,  அம்பேவெல ஆகிய தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும்.

அதன் பின்னர் 50,000 லீட்டரே மீதம் இருக்கும். இதை கொண்டு எப்படி 4 இலட்சம் கொள்ளளவு தொழிற்சாலையை நடத்துவது. இவ்வாறான திட்டங்களே கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நான் மில்கோ நிறுவனத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினேன், எவ்வளவு பணம் வேண்டும், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கி தருவதாக கூறினேன்.

மில்கோ நிறுவன ஊழியர்கள் கோபம் கொண்டாலும் பரவாயில்லை, நாம் மில்கோ நிறுவனத்தை படல்கம கொண்டு செல்வேன். அங்கு நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் பெறுமதியானது. அவற்றை வீணாக்க முடியாது. இவ்வாறான திட்டங்களை நாம் இடையில் நிறுத்த முடியாது. இது பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

கடந்த அரசில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் நாம் முன்கொண்டு செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்