இத்தாலியின் மிலன் நகரில் மால்பென்சா விமான நிலையத்தில் உடைமைகளை சோதனை செய்வதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது விமான நிலைய ஊழியருக்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பயணி, அவர் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்ணாடியை உடைத்து, அங்கிருந்த கவுண்டருக்கும் தீ வைத்துள்ளார்.
தகவலறிருந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீயை அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தில் யாருக்கும் எதுவித காயமும் ஏற்படவில்லை.
இருப்பினும் பயணியின் இச் செயலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.