சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் விசேட ஒன்றுகூடல்
சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் நேற்று (07) அக்கரைப்பற்று FN Beach Resort வளாகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் போரத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அஸ்ரப்கான், சிரேஷ்ட பிரதித் தலைவர் பீ.எம்.றஹ்மதுல்லா, பிரதித் தலைவர்களான கே.எல்.அமீர், றபீக் பிர்தௌஸ், உப தலைவர் ஏ.எல்.எம்.சினாஸ் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அக்கரைப்பற்று மாநகர சபை கௌரவ உறுப்பினர் ஏ.எஸ்.பாஸித் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.