மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள்

 


காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி  6 ஆயிரத்து 600 ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை   சனிக்கிழமை (16) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த பொலிஸ் நிலையத்தின்  வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் பவுச்சரை பெற்றுக் கொண்டு அதை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வழங்கி அதற்கான எரிபொருளை வாகனங்களுக்கு நிரப்பி செல்வது வழமையானது.

இந்த நிலையில்; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பொலிஸ் ஜீப் வண்டிக்கும் பொலிஸ் நிலையத்தில் உள்ள மின்சார உற்பத்தி செய்யும் இயந்திரமான ஜெனரேற்றருக்கும் டீசலுக்கான (வவுச்சர்) அனுமதி சீட்டை குறித்த சாரதி பெற்றுக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு  சென்று  அங்கு  12 ஆயிரத்து 400 ரூபாவுக்கு ஜீப் வண்டிகள் டீசலை நிரப்பிக் கொண்டு ஜெனரேற்றருக்கான 6 ஆயிரத்து 600 ரூபாய் பெறுமதியான டீசலை பெற்றுக் கொள்ளாமல் அதற்கான பணத்தை எரிபொருள் நிலையத்தில் வாங்கி எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக புலனாய்வு பிரிவினர் பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர் இதையடுத்து இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வந்த நிலையில் அரச பணத்தை மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து சம்பவ தினமான சனிக்கிழமை (16) இந்த அரச பண மோசடி தொடர்பாக பொலிஸ் சாரதியாக கடமையாற்றி வரும்  38 வயதுடைய சாரதியை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்   ஞாயிற்றுக்கிழமை (17) ஆஜர்படுத்தப்பட்ட போது  அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


 கனகராசா சரவணன்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்