தவிசாளராக நான் இருக்கும் வரை திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குள் இல்மனைட் அகழ்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கான அனுமதியும் வழங்கப்படாது என திருக்கோவில் பிரதேச சபை தவிசளார் எஸ்.சசிகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குள் இல்மனைட் அகழ்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதோடு இல்மனைட் அகழ்வதற்கான பாதைப் பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபையின் இரண்டாவது சபைக்கூட்ட தீர்மானத்தின்படி இந்தத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்தை மையமாக வைத்து இல்மனைட் அகழ்வு செய்வதற்கான முன்முனைப்புக்கள் இடம்பெறுகின்றன. இந்த பிரதேச மக்கள் இதற்கு நீண்ட காலமாக எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். இயற்கையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.