சட்டவிரோதமாக 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்த 2 இலங்கை விமான பயணிகள் இன்று காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது
சட்டவிரோதமாக 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்த 2 இலங்கை விமான பயணிகள் இன்று காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலைய அதிகாரிகள்
கைது செய்யப்பட்ட இரண்டு பயணிகளும் திருகோணமலையில் வசிக்கும் முஸ்லிம் தொழிலதிபர்களாகும்.
அவர்களில் ஒருவர் சீனன்குடாவை சேர்ந்த 45 வயதுடையவர், மற்றவர் முல்லிப்பொத்தானையைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் டுபாயில் இந்த சிகரெட்டுகளை கொள்வனவு செய்து குவைத் ஊடாக இன்று காலை 04.15 மணிக்கு ஜசீரா ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சட்டவிரோத பொருட்கள்
அவர்ககள் நான்கு பெரிய அட்டைப் பெட்டிகளில் 39,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 198 அட்டைப் பெட்டிகள் சிகரெட்டுகளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
இரு சந்தேகநபர்களும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளும் நாளை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.