தகவல் அறியும் உரிமைகள் ஆணைக்குழு தலைவர் நியமனம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 

இலங்கையின் தகவல் அறியும் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தலைவர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதை ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தொழில்வல்லுநர்களின் கொழும்பு கிளையின் பொதுச் செயலாளர் டெலான் டி சில்வா விமர்சித்துள்ளார்.

இது ஜனநாயக பொறுப்புக்கூறலுக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வெளிப்படைத்தன்மை

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது. இதனால் ஆணைக்குழுபயனற்றதாக உள்ளது.

ஊழலை அம்பலப்படுத்துவதில் ஆணைக்குழுவின் கடந்த கால பங்கை நினைவுகூர்ந்துள்ள டெலான் டி சில்வா, ஆணைக்குழுவுக்கு தலைவர் நியமிக்கப்படாமை அதன் வெளிப்படைத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும் பொது மேற்பார்வையை பலவீனப்படுத்துகிறது எனவும் எச்சரித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசியலமைப்பு பேரவை விரைவாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் சிவில் சமூகம் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்