அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்கள் ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரையும் அரவணைத்து பிரதேச நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருவது அட்டாளைச்சேனை பாலமுனை.ஒலுவில்.திகவாபி.ஆலம்குளம் போன்ற பிரதேசங்களின் அபிவிருத்தி என்றுமில்லாதவாறு உயரும்.
இந் நிலையில் இன்று 30 அட்டாளைச்சேனை தைக்கா நகர் பிரதேசத்தின் வடிகான் துப்பரவு. மின் விளக்குகள் பொருத்துதல் .வீதி புனரமைப்பு பணிகள் என இன்னும் பல்வேறுபட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் பிரதிச் தவிசாளர் பாறுக் நாஜீ. பிரதேச சபை உறுப்பினர்களான ஏசி.நியாஸ். ஐ.எல்.சிறாஜ். சி.எம். ஜெனுஸா இம்தியாஸ் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.