ஈஸ்டர் தாக்குதலினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் மத அனுஸ்டானங்களில் ஈடுபடும்போது பல நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள். எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளார்கள். தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களை போன்று இனவாத பிரச்சாரங்களினால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு நாடளாவிய ரீதியிலான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 2 முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள். இவர்கள் அமைச்சு பதவிகளை துறந்தார்களா, இல்லை, முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக இவர்கள் பேசவில்லை. ஆனால் நாங்கள் பேசினோம்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) உரையாற்றுகையில் தெரிவித்தார்.