இலங்கையின் இளம் தொழில்முனைவோருக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு

 

இலங்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தியோகத்தராக தோன்றி, நிதியுதவிகள் மற்றும் மானிய உதவிகளை வழங்குவதாகக் கூறும் ஒரு நபர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த எச்சரிக்கை அதிகாரபூர்வமாக விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், இலங்கையின் இளம் தொழில்முனைவோரை அணுகி, ஐரோப்பிய ஒன்றிய உதவித்தொகைகள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த நபர், போலி வாக்குறுதிகளை வழங்கி பணம் பெற்றுக்கொண்டு பின்னர் காணாமல் போவதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது ஒரு மோசடி” என ஐரோப்பிய ஒன்றியம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் உதவித்தொகைகள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தும், அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் தேர்வுவழிமுறைகள் வழியாக மட்டுமே வழங்கப்படுவதையும் வலியுறுத்தியுள்ளது.

இதில் முன்மொழிவுகள் தாக்கல் செய்யும் நடைமுறைகளும், மதிப்பீடுகளும் இடம்பெறுகின்றன.

தனிநபர் முகவர்கள் மூலம் நிதி வழங்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை என்றும், எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்தும், விண்ணப்ப செயலாக்கத்திற்காகவோ அல்லது ஒப்பந்தங்கள் தொடர்பாகவோ பணம் பெறப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து, இத்தகைய மோசடியை சந்தித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்