சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் விஷேட ஒன்றுகூடல்.
எம்.எஸ்.எம். ஜஃபர் (JP) அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது பில் பில் தனியார் விடுதியில் இன்று மாலை 7 மணிக்கு இடம்பெற்றது.
இப்போரத்தின் சமூகநலச் செயற்பாடுகளில் ஒன்றான
கெளரவிப்பு நிகழ்வு மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்த விஷேட ஒன்றுகூடல் நடைபெற்றது.
போரத்தினால் எதிர்காலத்தில் முன்னொடுக்கப்படவுள்ள
வேலைத்திட்டங்கள் தொடர்பில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய அங்த்தவர்களையும் இணைத்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.